பூண்டி நீர்தேக்கம் வறண்டது: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

பூண்டி நீர்தேக்கம் வறண்டது: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திருவள்ளூர்,ஜூலை 4, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட் டுள்ளது. சென்னை நகர மக்களின் குடி நீர் தேவைக்காக, சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சத்தியமூர்த்தியின் முயற்சியால், 1944, ஜூன் 14ஆம் தேதி ரூ.65 லட்சம் மதிப்பில் பூண்டி ஏரி என்ற சத்தியமூர்த்தி நீர்தேக்கம் கட்டி திறக்கப் பட்டது. தமிழக, ஆந்திர மாநில அரசு களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, 1983ஆம் ஆண்டு தெலுங்கு கங்கை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும், 12 டிஎம்சி நீரை, தமிழகத்திற்கு ஆந்திரா வழங்க வேண் டும். ஆந்திர மாநிலம், சிறீசைலம் நீர்த் தேக்கத்தில் இருந்து சோமசீலா, கண்ட லேறு அணை வழியாக, 406 கி.மீ. தொலைவு திறந்தவெளி கால்வாயில் பய ணித்து கிருஷ்ணா நீர் தமிழகம் வந்த டைகிறது.


பின்பு, தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை, ‘ஜீரோ பாயின்ட்’ என்ற இடத்திலிருந்து, பூண்டி ஏரிக்கு தண் ணீரை எடுத்து செல்ல, 25 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. பூண்டி அணையின் உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி, ஏரியின் பரப்பளவு 121 சதுர கிலோ மீட்டர். மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்தால் அணை நிரம்பினால், பேபி கால்வாய், லிங்க் கால்வாய்களின் வழி யாக செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப் பப்படும். இந்த ஏரியை வெட்ட 10 கிரா மங்களில் இருந்த மக்களை வெளியேற்றி, வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட் டனர். சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக முதலில் கட்டப்பட்டது இந்த நீர்தேக்கம்தான். அதற்கு பிறகு தான், புழல், சோழவரம் ஏரிகள் சென் னையின் குடிநீர் தேவைக்காக மாற்றப் பட்டன.  பூண்டி ஏரியில் மேடான பகுதியை தூர்வாரி சரியான அளவு மழைநீரை சேமிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோருகின்றனர்.


No comments:

Post a Comment