தமிழக அரசு சார்பில்  நாவலர் நெடுஞ்செழியன் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 11, 2020

தமிழக அரசு சார்பில்  நாவலர் நெடுஞ்செழியன் பிறந்த நாள் விழா

சென்னையில் முழு உருவ வெண்கலச் சிலை


முதலமைச்சர் அறிவிப்பு


சென்னை, ஜூலை11 நூற்றாண்டு விழாவில் நாவலர் நெடுஞ்செழி யனுக்கு சென்னையில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும், அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப் படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித் துள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-


அ.தி.மு.க. அரசு, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், நமது மாநி லம் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், சமுதாய மேம் பாட்டிற்காகவும் பாடுபட்டவர் களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களையும், சிறப்புகளையும், வருங்கால சந்ததி யினர் அறியது கொள்ளும் வகை யிலும், மணிமண்டபங்கள், நினை விடங்கள், நினைவு இல்லங்கள், உருவச் சிலைகள் மற்றும் நினை வுச் சின்னங்களை உருவாக்கி, அவற்றை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றது.


அறிஞர் அண்ணாவின் அன் பிற்கு பாத்திரமானவரும், திரா விட இயக்க மூத்த தலைவர்களின் ஒருவரும், தமிழ்நாடு அரசில் நீண்ட காலமாக அமைச்சராகவும் பணியாற்றிய நாவலர் இரா.நெடுஞ்செழியன், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் 11.7.1920இல் பிறந்தார். சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத் தில் தமிழ் இலக்கியத்தில் முது கலை பட்டம் பெற்றவர்.


தனது மாணவர் பருவத்தி லேயே சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப் பட்டார். எழுத்தாளர், இதழாளர், அரசியல் வல்லுநர், கருத்துவன்மை யோடும், நகைச்சுவையோடும் பேசும் சிறந்த சொற்பொழிவாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாவலரின் பேச்சுத் திற னைக்கேட்டு வியந்த தந்தை பெரியார், நாவலரை தன் சுற்றுப் பயணத்திற்கு அழைத்துச் சென் றார்.


அறிஞர் அண்ணா தி.மு.க.வை தொடங்கியபோது, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக வும், பின்னர் பொதுச்செயலாள ராகவும் சிறப்பாக பணியாற்றினார். அறிஞர் அண்ணாவால், “தம்பி வா! தலைமையேற்க வா! ஆணை யிடு, கட்டுப்படுகிறோம்'' என்று வாயாற புகழப்பட்ட பெருமைக் குரியவர் நாவலர் இரா.நெடுஞ்செழியன். அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்ற பெருமைக் குரியவர். 1977இல் அ.தி.மு.க.வில் இணைந்தபின், அக்கட்சின் அவைத்தலைவராகவும், பின்னர் பொதுச் செயலாளராகவும், திறம் பட பணியாற்றியவர். மேலும், தனது இறுதி மூச்சுவரை அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.


அது மட்டுமின்றி, எம்.ஜி. ஆரின் அமைச்சரவையிலும், ஜெயலலிதாவின் அமைச்சரவை யிலும் நிதித்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றிய பெருமைக் குரியவர். அறிஞர் அண்ணா மறைந்தபோதும், எம்.ஜி.ஆர். மறைந்தபோதும், இடைக்கால முதலமைச்சராக பதவி வகித்த சிறப்புக்குரியவர். இத்தகைய பன் முகத்தன்மை கொண்ட நாவலர் இரா.நெடுஞ்செழியனை சிறப்பிக் கும் வகையில், அன்னாருக்கு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக் கப்படும் என்பதையும், அவரது பிறந்த நாளான ஜூலை 11ஆம் நாளை (அதாவது இன்று) அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவும் நான் உத்தர விட்டுள்ளேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment