ராகுல்காந்தி வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூலை 12- பல் கலைக்கழக இறுதி ஆண்டுத் தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானி யக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவ காரம் தொடர்பாக, ‘மாண வர்களுக்காகப் பேசுங்கள்‘ என்ற இணையவழிப் பரப்பு ரையை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி பங்கேற்றார்.
ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள காட் சிப்பதிவில் கூறியிருப்பதா வது:
கரோனா, ஏராளமான மக்களுக்கு தீங்கு இழைத்துள் ளது. பள்ளி, கல்லூரி, பல் கலைக்கழக மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர். அய்.அய்.டி., கல் லூரிகள் ஆகியவை தேர்வு களை ரத்து செய்து, மாண வர்களை மேல்வகுப்புக்கு அனுப்பியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு குழப்பத்தை உண்டாக்கு கிறது. எனவே, மானியக் குழு வும் தேர்வுகளை ரத்து செய்து, முந்தைய தேர்வு அடிப்படை யில் தேர்ச்சி அளிக்க வேண் டும்.
இந்த கரோனா காலத்தில் தேர்வு நடத்துவது நியாயம் அல்ல. மாணவர்களின் குரலை மானியக்குழு காது கொடுத்து கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
No comments:
Post a Comment