இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் கடிதம்
புதுடில்லி, ஜூலை 13- டில்லி மவுலானா ஆசாத் பல் மருத் துவக் கல்லூரியின் இளநிலை மருத்துவ நிபுணர் அபிஷேக் பயானா (வயது 26) கரோனா வைரஸ் பாதிப்புக்கான அறி குறிகளான தொண்டை வலி, சுவாசப் பிரச்சினையால் பாதிக் கப்பட்டார். இவருக்கு 2 முறை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
2 முறை நடந்த கரோனா பரிசோதனையிலும், தொற்று இல்லை என்றுதான் முடிவு வந்திருக்கிறது. ஆனால் அவர் மரணம் அடைந்து விட்டார். அவர் மரணம் அடைந்ததையொட்டி எழு தப்பட்ட மரணக் குறிப்பில், அவருக்கு, கரோனா வைரஸ் தொற்றுடன் ஒத்த வெளிப் பாடுகளை தெளிவாக குறிப் பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பின்னணியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு எய்ம்ஸ் மருத் துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கடிதம் எழுதப் பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தொற்றுநோய்களின்போது எதிர்பாராத, விவரிக்கப்படாத மரணங்களுக்கு தொழில் முறை விசாரணையை நடத்து வதற்கு ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இப்போது பல்வேறு மருத் துவ நிபுணர்களும், கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று வந்தாலும், சம்மந்தப்பட்ட நபருக்குத் தொற்று அறிகுறிகள் இருந் தால், அவர்களுக்கு கரோனா சிகிச்சையைத் தொடங்கி விட வேண்டும், அவர்களுக்கு கரோனா தொற்றை உறுதி செய்யும் முடிவுக்காகக் காத்தி ருக்கக்கூடாது என்று குறிப் பிட்டுள்ளனர்.
பல முறை கரோனா அறி குறிகள் இருந்தும் பரிசோத னையில் தொற்று இல்லை என வந்து, கடைசியில் தொற்று உறுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டி உள் ளனர்.
டில்லி சப்தர்ஜங் மருத் துவமனையின் நுரையீரல் துறை பேராசிரியர் நீரஜ் குப்தா, “70 சதவீத உணர்திறனை மட் டுமே கொண்ட ஆர்.டி.பி.சி. ஆர். சோதனையை நம்புவதை விட, மருத்துவ அறிகுறி, சி.டி.ஸ்கேன் அறிக்கைகள் ஆகியவற்றில் எழும் அதி களவு சந்தேகம், சிகிச்சைக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும் என்பதுதான் நிபுணர்களின் பொது வான கருத்து,” என் கிறார்.
டில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் முதியோர் மருத்து வத் துறை பேராசிரியர் விஜய் குர்ஜார் கூறும்போது, “ 3 முறை, 4 முறை ஆர்.டி.பி.சி. ஆர். பரிசோதனை நடத்தியும் தொற்று இல்லை என வந்த வர்கள் உண்டு. ஆனால் அறி குறிகள் இருக்கும். சி.டி. ஸ்கேன் அறிக்கை கரோனா பாதிப்புக்கான வித்தியாச மான நிமோனியாவை அடை யாளம் காட்டும். பின்னர் அவர்கள் உடலில் கரோனா வுக்கான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும். இது அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லை என வந்தாலும், தொற்று இருப்பதையே உறுதி செய்வதாக அமை கிறது. எனவே நோயாளிக ளுக்கு அறிகுறிகள் இருக்கிற போது, வயதானவர்களாக, நாள்பட்ட பிற நோய்கள் உடையவர்களாக இருக்கிற போது கொரோனாவுக்கான சிகிச்சையைத் தொடங்கி விட வேண்டும். இவர்களுக்கு கரோனா தொற்று, ஆர்.டி. பிசி.ஆர். சோதனையில் உறு தியாவதற்காக காத்திருக்கக் கூடாது” என்றார்.
டில்லி இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை சுவாசக் கோளாறு, தூக்கக் கோளாறு மருத்துவ நிபுணர் நிகில் மோடி கூறும்போது, “ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோத னையில் தவறான முடிவு வரக்காரணம், சம்பந்தப் பட்ட நபரிடம் இருந்து மாதி ரிகள் முறையாக சேகரிக்கப் படாததுதான்.
அதே போன்று வைரசின் தாக்கம் லேசாக இருக்கிற போது, தொற்று இருந்தாலும் கூட, இல்லை என முடிவு வர வாய்ப்பு உள்ளது. இப்படிப் பட்ட நிலைகளில் கரோனா வைரஸ் தொற்றுக்கான அறி குறிகள் அதிகமாக இருக்கிற போது, இதில் ஒரு முடிவுக்கு வருவதில் நுரையீரல் சி.டி. ஸ்கேன், உதவியாக இருக்கும்” என்றார்.
No comments:
Post a Comment