ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • விமான நிலையங்களைப் பராமரிக்கும் தனியார் நிறுவனமான ஜி.வி.கே. நிறுவன அதிபர் டாக்டர் ஜி.வெங்கட கிருஷ்ணா ரெட்டி, அவரது மகன் ஜி.வி. நரசிம்ம ரெட்டி ஆகியோர் மீது ரூ.750 கோடி அளவில் முறைகேடு செய்துள்ளதாக மத்திய சிறப்புப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அய்தராபாத், பெங்களூரூ, மும்பை நகர விமான நிலையங்களை ஜி.வி.கே. நிறுவனம் முழுவது மாக புதுப்பித்து, பராமரிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • நீட், ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுமா என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு 3.7.2020 அன்று தனது அறிக்கையை மத்திய மனிதவளத்துறைக்கு அளிக்க உள்ளது.

  • பீகாரில் ஆளும் நிதிஷ்குமார் கூட்டணியில் உள்ள ராம் விலாஸ் பஸ்வானைத் தலைவராகக் கொண்ட எல்.ஜே.பி. கட்சியின் முக்கிய நிர்வாகி, ஆளும் நிதிஷ்குமார் கட்சி குறித்து எதிராக கருத்து சொன்னதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

  • அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், தற்போதைய அதிபர் டிரம்ப் கொண்டு வந்த ஹெச்.1.பி. விசா தற்காலிகத் தடையை உடன் நீக்குவேன் என ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

  • புது டில்லியில் பிப்ரவரி 2020இல் நடைபெற்ற கலவரம் குறித்து காவல்துறை விசாரணை மெத்தனமாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குற்றம்சாட்டும் வகையில் இருப்பதாகவும் தலையங்கச் செய்தி கூறுகிறது.

  • சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் ஏற்பட்டது குறித்த சி.பி.சி.அய்.டி. விசாரணை மக்கள் அனைவருக்கும் மன நிம்மதி தரும் அளவில் உள்ளது. நீதிமன்றம் பாராட்டுக்குரியது. இருப்பினும், நீதியை நிலை நாட்டிட அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என மற்றொரு தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் மரணம் குறித்து தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் சிறீதர் வெளி மாநிலத்திற்குத் தப்பியோட முயற்சித்த நிலையில், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே சி.பி.சி.அய்.டி. காவல்துறை யினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

  • காவலர்களின் நண்பன் என்ற பெயரில், காவல்துறை அதிகாரிகளின் அத்துமீறல்களுக்குத் துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஏற்பட்டுள்ள மரணத்தில் அவ்வமைப்பில் உள்ளவர்களின் ஈடு பாட்டைக் கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் பல சமூக அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

  • மருத்துவப்படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில், பிற்படுத்தப்பட்டோர்க்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தங்களது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் உடன் விசாரிக்க அறி வுறுத்த வேண்டும் என தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா:



  • பிற்படுத்தப்பட்டோரில் ‘கிரிமிலேயர்’ அளவுகோலில் மாதச் சம்பளத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசு அமைத்த குழுவின் அறிக்கையை மார்ச் மாதம் எதிர்த்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தற்போது ஆதரவு தெரி வித்துள்ளதாகத் தெரிகிறது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற மேலவைக்குக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பி.கே. ஹரிபிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலாளராகவும், மாநிலங்கள வையில் மூன்று முறை உறுப்பினராகவும் இருந்தவர். பிற்படுத்தப்பட் டோருக்கான நாடாளுமன்றக் குழுவில் 2012 முதல் உறுப்பினராக இருக்கிறார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • பயணிகள் ரயில் போக்குவரத்தில் 109 வழித்தடங்களில் தனியார் ரயில் போக்குவரத்தை அனுமதிக்கும் மோடி அரசுக்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித் துள்ளன. ’ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரயில் போக்குவரத்து பெரும் ஆதரவாக உள்ளது. உங்களால் என்ன முடியுமோ அத்தனையும் செய்யுங்கள். ஆனால், இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • அமெரிக்காவில் குடியேறி உள்ள இந்திய வம்சாவளியினர் ஜாதி அடையாளத்தையும், ஆதிக்கத்தையும் விடாமல் உள்ளனர். இது குறித்த வழக்கு அமெரிக்காவில் பதியப்பட்டு உள்ளது. இந்தியா விலும் இந்த சமூக அநீதி தொடர்கிறது என தலையங்கச் செய்தி கூறுகிறது.


- குடந்தை கருணா,


3.7.2020


No comments:

Post a Comment