புரட்சிக் கவிஞர் மகன் சு.மன்னர்மன்னன் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

புரட்சிக் கவிஞர் மகன் சு.மன்னர்மன்னன் மறைவு

கழகத் தோழர்கள், பல்வேறு கட்சி பொறுப்பாளர்கள் சார்பில் வீரவணக்கம்



புதுச்சேரி, ஜூலை 10- புரட்சிக் கவிஞ ரின் ஒரே மகனான "கவிமாமணி", "கலைமாமணி" சு.மன்னர்மன்னன் அவர்கள் தமது 92ஆவது அக வையில் 6.7.2020 அன்று உடல் நலக் குறைவின் காரணமாக மறைவுற்றார் என்கிற செய்தியறிந்து மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, கழக மண் டலத் தலைவர் இர.இராசு, செயலா ளர் சி.அறிவழகன், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஆடிட்டர் இரஞ்சித்குமார், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், இளைஞரணித் தலைவர் திராவிட இராசா ஆகியோருடன் சென்று மலர் மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.


உடன் புரட்சிக் கவிஞரின் மகள், பேரன்கள் கோ.செல்வம், கோ.பாரதி மற்றும் மன்னர் மன்னனின் பேரன் பேத்திகள், உறவினர்கள், தமிழ்ச் சங்க நிருவாகிகள், கவிஞர் பெருமக்கள் மற்றும் வில்லியனூர் கொம்யூன் கழகத் தலைவர் கரு.சி. திராவிடச் செல்வன், புதுச்சேரி நக ராட்சி கழக செயலாளர் த.கண்ணன், களஞ்சியம் வெங்கடேசன், புதுச் சேரி நகராட்சி ப.க. அமைப்பாளர் மு.குப்புசாமி, நியு பிலால் முகமது நிஜாம், மேனாள் கழகச் செயலாளர் வே.அன்பரசன், பகுத்தறிவாளர் கழக மேனாள் செயலாளர் கோ.மு. தமிழ்ச்செல்வன், ஓய்வு பெற்ற காவல்துறை குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தேசிங்கு, உழவர் கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


வி.சி.க.: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சு.பாவாணன், புதுச்சேரி மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், செயலாளர் அமு தவன், தீந்தமிழன், திருவாசகம், கபிலன், தாஸ் ஆகியோர் மலர் மாலை வைத்து மன்னர் மன்னனுக்கு இறுதி மரியாதை செய்தனர்.


எழுத்தாளர்கள்: புதுவை அண்ணா பேரவைத் தலைவர் முனை வர் சிவ.இளங்கோ, சிவ.இள.செங் குட்டுவர், கவிஞர் பைரவி, அரிமா பாமகள், மேனாள் எம்.எல்.ஏ. ம.இளங்கோ மற்றும் பலர் கவிஞர் மன்னர் மன்னனுக்கு இறுதி வணக் கம் செலுத்தினர்.


இரங்கல் கூட்டம்


புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் மண்டல தலைவர் இரா.இராசு, செயலாளர் கி.அறிவழகன், வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன் ஆகி யோர் முன்னிலையில் இரங்கல் கூட் டம் நடைபெற்றது. வி.சி.க. பொதுச் செயலாளர் சு.பாவாணன், இர.இராசு, சிவ.வீரமணி ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மேனாள் புதுவை மாநில கழகத் தலைவர் தெ.தியாகி மன்னர் மன் னன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வீர வணக்கம் செலுத்தி வெளியிட்ட அறிக்கை நகல் அனை வருக்கும் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment