தென் சென்னை மாவட்டத்தின் "விடுதலை விளைச்சல்"  நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

தென் சென்னை மாவட்டத்தின் "விடுதலை விளைச்சல்"  நிகழ்ச்சி


சென்னை, ஜூலை 1, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார் பாக விடுதலையின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பு "விடுதலை விளைச் சல்" காணொலி விழா 16.6.2020  செவ் வாய்க்கிழமை அன்று     மாலை 7.00 மணி அளவில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி   வரவேற்புரை ஆற் றினார்.      சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம் தொடக்க உரையாற்றினார்.  கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி வாழ்த்துரை வழங்கினார்.


மாநில கழக அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் சிறப்புரையாற்றி னார்.   சிறப்புரையில், கழகம் கடந்து வந்த பாதை தந்தை பெரியார் ஆற்றிய முக்கிய பணிகள் விடுதலை ஏட்டின் மூலமாக நடைபெற்ற சாதனைகள் தந்தை பெரியாரின் வழியில் தமிழர் தலைவர் அவர்கள் வழிநடத்திச் செல் லும் பாங்கு மற்றும் ஈழப் பிரச்சினையில் கழகம் எடுத்த சரியான அணுகுமுறைகள் போன்றவற்றை விளக்கிக் கூறி தெளிவு படுத்தினார்.  விடுதலை நாளேடு பரப்பும் வழிமுறைகளை எடுத்துக் கூறினார்.


மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப் புரை வழங்கினார்.


மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழ கன், துணைத்தலைவர் டி.ஆர். சேது ராமன், தென்சென்னை மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தலைவர் இரா.மு.மா ணிக்கம், வடசென்னை ப.சேரலாதன், மயிலை ஈ.குமார், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மகளி ரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, மு.சண்முகப்பிரியன்,  குன் றத்தூர் மு.திருமலை, தாம்பரம் சு.மோகன் ராஜ், ச.துணைவேந்தன், நாத்திகன்,  சீனிவாசன்,  சோழிங்கநல்லூர் பாண்டு, சோழவரம் சக்கரவர்த்தி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி,  பெரம்பூர் வெங்கடேசன், சோம சுந்தரம், மாணவர் கழகம் வி.தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டு கருத்து களையும் கூறினர். நிகழ்ச்சியின் இறுதி யாக மாவட்ட துணை செயலாளர் சா.தாமோதரன் காணொலி நிகழ்ச்சி யில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment