கொரோனா கூத்துகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 11, 2020

கொரோனா கூத்துகள்!

2020ஆம் ஆண்டு தொடங்குனதுமே எல்லா டிவியிலயும் ஜோசியர்களை உட்கார வச்சு இந்த ஆண்டு எப்படி இருக்கும்னு கேட்டதுக்கு இந்தியாவோட வளர்ச்சி அமோகமா இருக்கும்னபோட்டி போட்டுக்கிட்டு அளந்துவிட்டாங்க! அவங்க சொன்னது சரிதான்... அவங்க எல்லாரும் கொரோனா பாதிப்போட வளர்ச்சியைத்தான் சொல்லியிருக்காங்க! நாமதான் தப்பா புரிஞ்சுக்கிட்டோம்! கொரோனா பாதிப்பில் தொடக்கத்தில் இந்தியா பத்து இடத்துக்குள்ளயே நுழையாம இருந்துச்சு,,, அப்புறமா பத்தாவது இடத்தைப் பிடித்ததுமே ஸ்பீடா முன்னேறத்தொடங்கி மூனே மாசத்துல மூன்றாவது இடத்தில் வந்து நிற்குது! இன்னும் கொஞ்ச நாளில் முதலிடத்துக்கு முன்னேறிடும்! ஜோசியம் தப்பானாலும் நாம இப்படி மாத்தி புரிஞ்சுக்கணும்! அப்போதான் ஜோஸியத்தை வாழ வைக்க முடியும்! ஜோஸியம் வாழவைக்கறதில்ல, நாம தான அதை வாழவச்சுக்கிட்டு இருக்கோம்!


 


கொரோனா பரவத்தொடங்குனப்ப நாம கையக் காலவச்சு சும்மா இருந்தாத்தான! எங்கோ தெருமுனையில் செல்லும் அய்ஸ் வண்டிக்காரரை கையத் தட்டி அழைப்பதுபோல, சும்மா போயிட்டிருந்த கொரோனாவை பால்கனியில் நின்று கைதட்டி வீட்டுக்குக் கூப்பிட்டாச்சு! அதுமட்டுமா? இருட்டுல எந்த வீட்டுக்காவது வழி தவறிப்போயிடக்கூடாதுன்னு பால்கனியில் நின்னு செல்போன் லைட்டடிச்சு வேற கூப்பிட்டாச்சு! இப்டி வம்படியா கூப்பிட்ட பின்னால, இப்போ, டேபிள்மேட் மாதிரி எங்க அபார்ட்மென்ட்ல எதிர் வீட்டுல இருக்கு, கீழ் வீட்டுல இருக்கு, மேல் வீட்டுல இருக்குன்னு புலம்பிட்டு இருக்காங்க! அன்னைக்கே வீதி வீதியா கோ கோ கொரோனா பஜனை பாடிட்டுத் திரியாம வீட்டுக்குள்ள அடங்கியிருந்தோம்னா இப்டி பரவியிருக்குமா?! கொரோனா சமூகப்பரவலைத் தொடங்கி வச்சுட்டு, கோயம்பேடு தான் காரணம், காசிமேடு தான் காரணம்னு கையக்காட்டுனா எப்புடி பாஸ்?! நமக்கு ஒவ்வொரு டாஸ்க்கா தந்த அந்த பெரியவரு, மாஸ்க்கத் தந்தாலாவது பிரயோஜனப்பட்டிருக்கும்!


 


கொரோனா ஊரடங்கு தொடங்குனப்ப நிறைய கம்பெனிகளில் வொர்க் ப்ரம் ஹோம் ஆரம்பிச்சாங்க! அப்புறமா பசங்களுக்கு ஸ்டடி ஃப்ரம் ஹோம்னு ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிச்சாங்க! அப்புறம் என்னடான்னா மேரேஜ் ஃப்ரம் ஹோம்னு வீட்டுல வச்சே கல்யாணம் பண்ணத்தொடங்கிட்டாங்க! கொரோனாவால கூட்டம் கூடக்கூடாதுன்னு கல்யாணத்துக்கு 30 பேரை மட்டும் தான் கூப்பிடணும்னு அரசாங்கமே ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடுச்சு! இவங்க என்னடான்னா வீட்டுலயும் முப்பத்திமுக்கோடி தேவர்களைக் கூப்பிட்டு அவங்க சாட்சியா கல்யாணம் பண்றாங்க! அய்யரு ஒழுங்கா மந்திரம் சொன்னாலே புரியாது, இதுல மாஸ்க்க மாட்டிக்கிட்டே மந்திரம் சொல்றாரு! கல்யாணமானவங்களுக்குள்ள சண்டை சச்சரவு வந்தால், மாஸ்க் மாட்டிட்டு மந்திரம் சொன்னதாலதான் எங்க வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுன்னு பின்னால குத்தம் சொல்லிடக்கூடாது! அதுபோகட்டும், ஹனிமூனுக்கு எங்க போறதா உத்தேசம்? இப்போதைக்கு மொட்டை மாடிக்குப் போயி மினி மூன் தான் பார்க்க முடியும்!!


 


இந்த கொரோனா நம்முடைய தினசரி வாழ்க்கையை ரொம்பவே தான் புரட்டிப் போட்டுடுச்சு! டிவிய ஆன் பண்ணினால் கிருமியை வைத்து விளம்பரம் பண்ணிட்டுத் திரிஞ்ச சோப்பு, பெஸ்ட்டு, பாத்ரூம் கிளீனர் கம்பெனிகளெல்லாம் முன்ன கிருமி எப்படி இருக்கும்னு ஐடியா இல்லாமல், ஆளாளுக்கு  டிசைன் டிசைனா கிராபிக்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க! இப்போ ஹார்பிக்ல இருந்து அத்தனை பேரும் கொரோனா டிசைனைத்தான் கிருமின்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க! பின்ன, எந்த கிருமிக்கு மார்க்கெட் இருக்குதோ அந்த கிருமியைத்தான ஹீரோவா செலக்ட் பண்ணுவாங்க! இந்த கொரோனாவுக்கு இன்னும் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ மார்க்கெட் இருக்கும். அப்புறமா வேற ஒரு கரோலினா, புரோனான்னு எதாவது கிருமி வர்றப்ப அதுக்கு மாறிடுவாங்க!


 


இந்த நாலு மாசத்துல, மாஸ்க்க எல்லாரும் மாட்டிப்பழகிட்டாங்க... வழக்கமா போட்டுக்கற பேன்ட், சட்டை மாதிரியே மாஸ்க்கும் மாறிடுச்சு! யாராவது மாஸ்க் மாட்டாமல் வந்தால் என்னவோ துண்டுகூட கட்டாமல் பாத்ரூம்லருந்து வந்தவங்கள வித்தியாசமா பார்க்கற மாதிரி பார்க்கறாங்க! ஜவுளிக்கடையில இப்பல்லாம் ட்ரெஸ்சுக்கேத்த மாதிரி மேட்சிங் மாஸ்க் வந்திடுச்சு...புனேல ஒருத்தர் தங்கத்துல மாஸ்க் செஞ்சு மாட்டிட்டாரு... விதவிதமான மாஸ்க்கெல்லாம் வந்துடுச்சு... அப்டியே பொய்யா பேசினால் அதை வடிகட்டி உண்மை மட்டுமே வெளில கேட்கற மாதிரி மாஸ்க் கண்டுபிடிச்சால் தேவல! ஒருத்தர் ரேடியோ மூலமா பொய்யா பேசுற கெட்ட பழக்கத்துக்கு ஆளாகிட்டாரு! அவரால மக்களும் கெட்டுப்போறாங்க! நாம எதிர்பார்க்குற மாஸ்க்கை மட்டும் பொதுநலன் கருதி யாராவது சட்டுபுட்டுன்னு கண்டுபுடிச்சா நல்லது! அப்புறமா அந்த மாஸ்க்கை அவர் மாட்டுனார்னா... பொய் பேசி மாட்டுவார்!


 


கடவுள் இல்லைன்னு நாத்திகவாதிகள் சொல்லிட்டு இருந்த காலமெல்லாம் மாறி, ஆத்திகம் பேசுறவங்களே கடவுளைப் பார்க்க விரும்பாமல் கோவில் கருவறையிலயே தனிமைப்படுத்திட்டாங்க! கருவறை எங்களுக்குத்தான் சொந்தம்னு சொல்லிட்டுத் திரிஞ்சவங்க, இப்ப கோவிலுக்குள்ளகூட காலடி எடுத்துவைக்கல! கடவுளாவது காலாற நடந்துட்டு வரலாம்னு பார்த்தால் கோவில் கதவை லாக் பண்ணிட்டாங்க! தினமும் விதவிதமா அபிஷேகம் பண்ணிட்டு இருந்தவங்க, இப்ப என்னடான்னா கிருமி நாசினியை வச்சு கடவுளையே சுத்தம் பண்றாங்களாம்! அப்போ இவ்வளவு நாளா, கடவுளே காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டு இருந்ததெல்லாம் நடிப்பா கோப்பால்?!


 


டிஜிட்டல் இந்தியான்னு சொல்லி ஆதார் கார்டைக் கொண்டுவந்தப்பவே நாம இந்த நாட்டுக்கு அந்நியப்பட்டுத்தான் போனோம்! அடுத்து ரேஷன் கார்டுல ஸ்மார்ட் கார்டுன்னு கொண்டாந்தாங்க... இப்போ டிஜிட்டல் இந்தியா, மாவட்டத்துக்கு மாவட்டம் போறதுக்கே பாஸ்போர்ட் மாதிரி இ-பாஸ்ல வந்து நிற்குது! ரேஷன் கார்டில் வெவ்வேறு கலர்களில் ரேஷன் கார்டு கொடுத்தது மாதிரி, இனிமேல் மாவட்டங்களுக்கிடையே இ-பாசுக்கு ஒரு கலர், ஊரு விட்டு ஊரு போற இ-பாசுக்கு ஒரு கலர், தெரு விட்டு தெருவுக்கு போறதுக்கு இ-பாசுக்கு ஒரு கலர், பக்கத்து வீட்டுக்குப் போற இ-பாசுக்கு ஒரு கலர்னு கொண்டு வந்துடுவாங்க! மணிபர்ஸ்ல கிரெடிட் கார்டை அடுக்கி வச்ச மாதிரி இ-பாஸை கலர் கலரா அடுக்கி வச்சுக்கிட்டு தான் ஊர் சுத்தணும்! இதுல அகண்ட பாரதம்னு காமெடி பண்ணிட்டு இருந்த குரூப்பத்தான் தேடிட்டு இருக்கேன்! உங்க கண்ணுல பட்டால் சொல்லுங்க பாஸ்!


-புத்தன்


No comments:

Post a Comment