பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்மூலம் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 9 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் முடிவினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரி வினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்ப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானதையடுத்து, தமிழக அரசியல் தலை வர்கள் பலர் இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
‘‘மத்திய அரசின் நேரடிப் பணி நியமனங்களில் 27 சதவீத இடங்கள் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு குறிப்பிட்ட கிரிமி லேயரின் கீழ்வருபவர்களுக்கு பொருந்தாது என வகைப் படுத்தப்படுத்தப்படுகிறது. கிரிமிலேயருக்கு 6 குறிப்பிட்ட தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் வருமானம் ஒரு நிபந்தனையாக கொண்டு வரப்படுகிறது. ஓபிசி இடஒதுக்கீடு பெறுவோர் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய் என 1993ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இது 1.9.2017 அன்று 8 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது பெற்றோரின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானத்தில் விவசாய வருமானத் தையும் சேர்க்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், தற்போது கிரிமிலேயர் கணக்கிடும்போது விவசாய வருமானம் சேர்க்கப்படாமல் உள்ளது. விவசாய வருமானத்தை பெற்றோரின் ஒட்டு மொத்த வருமானத்தில் சேர்த்தால் பெரும்பாலானோருக்கு அரசுப் பணியை பெறுவதிலும், அரசு நலத்திட்டங்களைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும். இது இடதுஒதுக்கீடு கிடைக்காமல் போகும் நிலையை ஏற்படுத்தும். எனவே ஓபிசி கிரிமிலேயர் வகைப்படுத்தும் வருவாய் பிரிவில் ஊதியத்தை சேர்க்கக் கூடாது. ஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு தொடர்பான புதிய அணுகுமுறை யைத் திரும்பப் பெறவேண்டும். வருமானத்தை கணக்கிடும் போது பெற்றோர்களின் ஊதியம், விவசாய வருமானத்தை சேர்க்கக்கூடாது.
ஓபிசி பிரிவினருக்கு கிரிமிலேயர் வரம்பை ஏற்கெனவே உள்ள நடை முறை விதி களின் படியே கணக்கிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது உள்ள மாதிரியை பின்பற்றி மத்திய அரசும் ஓபிசி இட ஒதுக்கீட்டை தொடர வேண்டும்.’’
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment