"பலமான எதிர்ப்பு இல்லாவிட்டால், பெரியாரின் இயக்கம் இந்நாட்டில் பலமாக வேரோடியிருக்க முடியாது" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 8, 2020

"பலமான எதிர்ப்பு இல்லாவிட்டால், பெரியாரின் இயக்கம் இந்நாட்டில் பலமாக வேரோடியிருக்க முடியாது"

‘‘ஒப்பற்ற தலைமை-2'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை



சென்னை, ஜூலை 8 ‘‘பலமான எதிர்ப்பு இல்லா விட்டால், பெரியாரின் இயக்கம் இந்நாட்டில் பலமாக வேரோடியிருக்க முடியாது.'' என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


‘ஒப்பற்றத் தலைமை'


கடந்த 28.6.2020 மாலை 5.30 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' எனும் தலைப்பில் இரண் டாம் பொழிவினை காணொலிமூலம் கழகத் தோழர்களி டையே ஆற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


பெரியார் என்பவர், உண்மையிலேயே


‘‘பெரியாரில் பெரியார்''


இன்றைய என்னுடைய பொழிவில், ஒரு செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கி றேன். அதனைப் பதிவு செய்யவேண்டும் - இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமல்ல, இனிமேல் வரக்கூடிய தலைமுறையினருக்கும் பாரம்பரியமாக அது தெரிய வேண்டும். அப்பொழுதுதான், தந்தை பெரியார் என்பவர், உண்மையிலேயே ‘‘பெரியாரில் பெரியார்'' என்பது விளங் கிக் கொள்ள உதவும்.


"இதோ பெரியாரில் பெரியார்'' என்று பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் திருவண்ணாமலை மாநாட்டிலே பேசினார்.


எதிர்நீச்சலில் மிகப்பெரிய வீரர் தந்தை பெரியார் அவர்கள். எதிர்ப்பிலே வளர்ந்த பெரியார் என்பதில் ஒரு பகுதியை இவர் எடுத்துக் காட்டியிருக்கிறார்.


ஆனால், நான் சிந்தித்த முறையில், எப்படி அந்த அமைப்பு இருக்கிறது என்று அய்யாவினுடைய வாழ்க் கையைப்பற்றி நாம் ஆழமாக எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில், ஒன்றை நாம் கவனிக்கவேண்டும்.


எதிர்ப்பு என்பது பலவகையானது.


ஒன்று, முதற்கண் எதிர்ப்பாளர்களுடைய எதிர்ப்பு - அந்த எதிர்ப்பு சனாதன எதிர்ப்பாக இருக்கும். மதவாதி களுடைய எதிர்ப்பாக இருக்கும். ஜாதி வெறியர்களுடைய எதிர்ப்பாக இருக்கும். அரசாங்கத்தினுடைய எதிர்ப்பு - வைதீகர்களுடைய எதிர்ப்பு - அடக்குமுறைகளின் மூல மாக வரக்கூடிய எதிர்ப்பு - அரசியல் கட்சிகள், காலித் தனங்கள் மூலமாகக் கொடுக்கக் கூடிய எதிர்ப்பு - ஆரிய - பார்ப்பனர்களுடைய எதிர்ப்பு கடுமையான எதிர்ப்பாக இருக்கும். பார்ப்பனர்கள் நேரிடையாக வரமாட்டார்கள், நம்மவர்களைத் தூண்டிவிட்டு, சுக்ரீவர்களாக, அனுமார் களாக, பிரகலாதன்களாக ஆக்கி, அவர்களை அனுப்பு வார்கள்.


அடுத்தது, தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய உடல்நலத்தைப்பற்றி கவலைப்படாமல் வாழ்ந்தார்.


நோய்ச் சங்கடங்கள், எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம்; ஒரு மனிதனுக்கு உள்ள வலிமை இருக் கலாம்; எதிர்த்துப் போராடக்கூடிய துணிவு இருக்கலாம். ஆனால், அவருடைய உடல்நலம் என்று சொல்லும் பொழுது, உள்ள பலம் எப்படி இருந்தாலும், உடல்நலம் குன்றியிருக்குமானால், அதனைத் தாங்கிக் கொண்டு, தன்னுடைய லட்சியப் பயணத்தை - எதிரிகளுடைய தாக்குதல்களையெல்லாம் சமாளிப்பது என்பது இருக் கிறதே - அரசாங்க அடக்குமுறைகளையெல்லாம் சந்திப் பது என்பது இருக்கிறதே, அவையெல்லாம் அவ்வளவு எளிதான பணியா? என்பதை அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள் தோழர்களே!


அவற்றையெல்லாம் தாங்கி, தந்தை பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார், கடைசிவரையில். தன்னுடைய கடைசி கூட்டத்தில்கூட, ‘‘அம்மா, வலிக்கிறதே!'' என்று முனகிக் கொண்டே, வலியைப் பொறுத்துக் கொண்டே 1973, டிசம்பர் 19 ஆம் தேதி தியாகராயர் நகரில், வேனிலேயே அமர்ந்துகொண்டு கடைசிக் கூட்டத்தில் பேசினார். அப்பொழுதுகூட, ‘‘அம்மா, அம்மா'' என்று வலி தாங்க முடியாத அளவிற்கு இருந்தாலும், தன்னுடைய உரையை நிறுத்தவில்லை. அந்தக் கூட்டம் முடிந்து, அன்றிரவே மருத்துவமனைக்குச் செல்கிறார். குடலிறக்க நோய் (Strangulated Hernia) என்று சொல்வார்கள். மிகப்பெரிய அள விற்கு அழுத்தம் ஏற்பட்டதால், வலியும், சங்கடமும் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டு, அவருக்கு கடைசி முடிவு வரவேண்டிய அந்தச் சூழல் ஏற்பட்டது.


அந்த நிலையில்கூட, அய்யா அவர்கள் உறுதியோடு இருக்கிறார்.


எதிரிகளோடு சேர்ந்துகொண்டு விமர்சனம்


மூன்றாவது கட்டம் நண்பர்களே, தன்னோடு இருந் தவர்கள், தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தன்னுடைய இயக்கத்தை விமர்சனம் செய்துவிட்டு, அவரால் விளம் பரப்படுத்தப்பட்டவர்களே, குறை சொல்லிவிட்டு அல்லது எதிரிகளோடு சேர்ந்துகொண்டு விமர்சனம் செய்யும் பொழுது - அதைப்பற்றியும் கவலைப்படாமல், தன்னு டைய பயணத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக் கிறார். இது ஒரு கட்டத்தில் ஏற்பட்டதல்ல! ஒவ்வொரு கட்டத்திலும் இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்ட நேரத்தில், எதிர்ப்பை சமாளித்து, எதிர்நீச்சல் அடித்துச் சென்றிருக் கிறார். அந்த எதிர்நீச்சலிலேயே பல வகையான தொல்லை கள். உள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்கக்கூடிய தலை வர் அல்ல. கூட்டங்களுக்குச் செல்வார். அங்கே எப்படிப் பட்ட கலவரங்கள், காலித்தனங்கள், அவமானங்கள் ஏற் பட்டன. அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.


இப்படி துரோகங்கள் என்றாலும் அதையும் அவர்கள் சந்திக்கக்கூடிய வகையில், மன வலிமையை உருவாக்கிக் கொண்டார்கள்.


படிக்கப் படிக்கப் படிக்க சுரங்கத்தில் தொட்டனைத் தூறும் மணற்கேணி என்று சொல்வதைப்போல, அவ் வளவு செய்திகள் வருகின்றன.


பகிர்ந்துகொள்ளவேண்டும்;


பதிவு செய்யவேண்டும்!


நான் ஏராளமாகச் சமைத்துவிட்டேன். இலையோ சிறிதாக இருக்கிறது. நீண்ட நேரம் உங்களை காக்க வைக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்குள் வருகிற பொழுது கூட, கிளைக்குள்ளே கிளை என்று பல்வேறு செய்திகள். படிக்கப் படிக்க ஆழமாகச் சென்று கொண்டே இருக் கிறது. இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்; இந்தச் செய்தியை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் என்னை உந்துகிறது.


நம்முடைய தோழர்கள் சில அய்யங்களைக் கேட் கின்றபொழுது, அதற்கான பதிலை சொல்லும்பொழுது, புதிய செய்திகள் கிடைக்கின்றன.


பகுத்தறிவினுடைய சிறப்பம்சம்


ஆக, ஒரு பெரிய வாய்ப்பு, பெரியார் வாழ்நாள் மாண வனாக இருக்கின்ற நான், இன்னும் தீவிர மாணவனாக ஆவதற்குக் கரோனா உதவி செய்திருக்கிறது. அந்த வகை யில், கரோனாவினால் பல கொடுமைகள் நடந்திருந்தாலும், நடைபெற்றுக் கொண்டிருந்தாலும்கூட, இது ஒரு வகை யில், மறைமுகமான அதையும் நாம் நம்முடைய வசதிக்குத் திருப்பியிருக்கின்றோம். அதுதான் பகுத்தறிவினுடைய சிறப்பான அம்சமாகும். பகுத்தறிவாளர்களுக்கான ஒரு பெரிய வாய்ப்பாகும்.


நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் கூட, அய்யா அவர்களுடைய மன உறுதி எப்படி இருந்தது என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லிவிட்டு, நான் நேரடியாக அடுத்தச் செய்திக்கு வருகிறேன்.


அய்யாவினுடைய உயிர் பிரிகிறது!


1973, டிசம்பர் 19 ஆம் தேதி அய்யா அவர்கள் இறுதி உரையாற்றுகிறார். இரவு 2 மணிக்குச் சங்கடம் ஏற்பட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குச் செல்கிறார். டாக்டர் இராமச்சந்திரா, மற்ற டாக்டர்கள் பார்த்துவிட்டு, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று சொன் னவுடன், 20 ஆம் தேதி, மதியம் வேலூர் மருத்துவ மனைக்குச் செல்கிறோம். 21, 22 ஆம் தேதி அய்யா அவர்கள் நன்றாக, தெளிவாகத்தான் இருந்தார். 23 ஆம் தேதி, அய்யா அவர்களுக்கு திடீரென்று ‘கோமா' என்ற மயக்கம் ஏற்படுகிறது; 24 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு அய்யாவினுடைய உயிர் பிரிகிறது.


22 ஆம் தேதியன்று, அய்யா அவர்கள் எங்களோடு நன்றாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய உடல் நிலையைப்பற்றியெல்லாம் குறிப்பு எழுதுகிறோம். நான், அன்றைய ‘விடுதலை' நிர்வாகி தோழர் சம்பந்தம் அவர் களும், அன்னை மணியம்மையார் அவர்களும் இருக் கிறார்கள். அய்யா அவர்களுடைய உடல்நிலையைப்பற்றி எழுதி, அவரிடம் காட்டிவிட்டுத்தான், ‘விடுதலை'க்கு அனுப்புவேன். அய்யாவினுடைய சுற்றுப்பயணம் தொடர் பான செய்திகள் ‘விடுதலை'யில் 2 ஆம் பக்கத்தில் வரும்.


அய்யா அவர்களுக்குக் கோபம் வந்தது


திருவண்ணாமலையில் கூட்டம், இன்னும் சில ஊர்களில் சுற்றுப்பயணம் என்று செய்திகள் போட்டுக் கொண்டிருந்தோம்.


அன்று அய்யாவிடம் நான், ‘‘அய்யா உங்களுடைய உடல்நலம் இப்படி இருக்கின்ற காரணத்தினால், அந்த சுற்றுப்பயணத்தைப் போடுவதை நிறுத்தலாமா?'' என்று ஆசிரியர் என்ற முறையில் கேட்டபொழுது, அருகில் ‘விடுதலை' நிர்வாகியும் இருக்கிறார்.


உடனே அய்யா அவர்களுக்குக் கோபம் வந்தது. ‘‘என்ன? ஏன் அதை நிறுத்தவேண்டும் என்று சொல் கிறீர்கள்? நான் போய் பேசமாட்டேனா? தாராளமாகப் பேசுவேன். பேசப் போவது நான். நீங்களா பேசப் போகிறீர் கள்? அப்படியே இருக்கட்டும், அந்தச் சுற்றுப்பயணத்தைப் போடுங்கள்'' என்று அவர் சொன்ன வேகம் இருக்கிறதே, மிகக் கடுமையான குரலில் சொன்னார்.


கடமை உணர்ச்சி அவரை எவ்வளவு உந்தி இருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு பெரிய உதாரணம் வேண்டிய தில்லை.


19 ஆம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில்....


எனவே, நோயோடு அவர்கள் இருந்தாலும், அந்த நோயோடு எதிர்த்துப் போராடிக் கொண்டு, 19 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார். வேறொருவராக இருந்தால் என்ன செய்திருப்பார்கள், ‘‘தள்ளிப் போடுகிறோம்'' என்று அறிவிப்புக் கொடுங்கள் என்று சொல்லியிருப்பார்கள்.


ஆகவேதான், தந்தை பெரியார் என்ற அந்த மாபெரும் மகத்தான தலைவருடைய அந்தக் களம் - எதிர்நீச்சல் என்பது இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல.


ஒரு பக்கத்தில் எதிர்ப்புகள் - அந்த எதிர்ப்புகள் பல ரூபத்தில் இருக்கக்கூடிய எதிர்ப்புகள்.


இன்னொரு பக்கத்தில்,  உள்ள வலிமை இருந்தாலும், நோய் என்ற உடல் உபாதைகள்.


தன்னோடு இருந்தவர்களால் துரோகம் - இவ்வளவு எதிர்ப்புகளிலும் எதிர்நீச்சல் அடித்திருக்கிறார் தந்தை பெரியார்.


‘‘விட்டுக் கொடுக்காத வீரர்''


‘‘எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா.'' என்ற தலைப்பில், சாமி.சிதம்பரனார் அவர்கள் எழுதிய நூலில், உள் தலைப்பாக ‘‘விட்டுக் கொடுக்காத வீரர்'' என்ற ஒரு தலைப்பில் விளக்குகிறார்.


1952 ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்:


‘‘முன் வைத்த காலைப் பின் வைக்காத வீரர்களின் வரிசையில் பெரியாரை முதல் இடத்தில் நிறுத்த வேண்டும். எந்தக் கருத்தையும், தானே நன்றாக அலசி ஆராய்ந்த பிறகுதான் வெளியிடுவார். தான் சொல்லுவதைப் பிறர் ஒப்புக்கொள்ளவேண்டுமென்றே எதிர்பார்ப்பார். தனது உள்ளக் கருத்தை ஒப்புக்கொள்ளுகிறவர்களைத்தான் தனது தோழர்களாகவோ, நண்பர்களாகவோ, தொண்டர் களாகவோ கொள்ளுவார். தன் கருத்துக்சூ மறுப்புக் கூறுகிறவர்களைத் தனது பொது வாழ்வின் எதிரிகள் வரிசையில் வைத்தே எண்ணுவார். பெரியார் எந்தக் காலத்திலும் பிறர் கருத்துக்குத் தலைகுனிந்ததேயில்லை. இதுதான் அவரிடமுள்ள ஒரு தனித்தன்மை. அவர் ஒரு புரட்சிக்காரராக - சீர்திருத்த சிற்பியாக - இயக்கத்தின் தலைவராக இருப்பதற்கு இத்தன்மைதான் காரணம்.


மதப் புரட்சித் தலைவர்களுக்கு- சமுதாயப் புரட்சி வீரர்களுக்கு- பிறருக்குத் தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத வீரத்தன்மைதான் வேண்டும். இத்தன்மையே அவர்களுக்கு வெற்றியைத் தரும் வீரவாள்.


ஓர் அரசியல் கட்சித் தலைவருக்கு விட்டுக் கொடுக்கும் தன்மைவேண்டும். இக்குணமுடைய அரசியல்வாதிகள் தான் மற்றவர்களையும் அணைத்துக் கொண்டு அரசிய லிலே வெற்றி பெற முடியும். ஆனால், சமுதாயப் புரட்சிக் காரர்களிடம் இக்குணம் இருந்தால் அவர்கள் வெற்றிப் பாதையை அணுகவே மாட்டார்கள். விட்டுக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஒவ்வொருவருக் காகவும் ஒவ்வொரு கொள்கைகளை விட்டுக் கொடுத்துக் கொண்டே வருவார்களானால், இறுதியில் அவர்களிடம் எந்தக் கொள்கையும் மிஞ்சியிருக்காது.


இதனால் தான் சமுதாய-மதப் புரட்சிக்காரர்கள் எதை யும் யாருக்காகவும் விட்டுக் கொடுப்பதில்லை.


இதுவரையிலும் இவ்வுலகிலே தோன்றி மறைந்த சீர்திருத்தப் புரட்சிக்காரர்களின் வரலாறுகளை எண்ணிப் பாருங்கள். இந்த உண்மை விளங்கும். சாக்ரடீஸ், கவுதம புத்தர், ஏசு கிறிஸ்து, நபி நாயகம் இவர்கள் எப்பொழுதாவது, எவருக்காகவாவது தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுத்ததுண்டா? இல்லை. இதுவேதான் அவர்களுடைய வெற்றிக்குக் காரணம்.


சரித்திரத்திலே கண்ட சமுதாயப் புரட்சிக்காரர்கள் தங்கள் கொள்கையிலே கண்டிப்பாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் கருத்துகளைப் பிறரிடமிருந்து கடன் வாங்கியதுமில்லை; திருடியதுமில்லை. மற்றவர்களுடன் கலந்து பேசத் தீர்மானித்துக் கொண்டவர்களும் அல்லர்.


அவர்கள் எவை மனித சமுதாயத்திற்கு நன்மை நடப்பவை என்று கண்டார்களோ அவைகளை மக்களிடம் எடுத்துக் கூறினார்கள். எவை மனித சமூக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகள் என்று எண்ணினார்களோ அவை களை  அஞ்சாமல் கண்டித்தார்கள். எவருடைய போற்றுத லையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. தங்கள் உள்ளத்தில் தோன்றிய உண்மைகளை உலகினருக்கு எடுத்துரைத்தார்கள்.


இத்தகைய புரட்சிக்காரர்களிலே ஒருவர் தான் - பெரியார். ஆனால் அவர்களுக்கும் இவருக்கும் ஒரு வேற்றுமையுண்டு. பண்டைப் பெரியார்களிலே பலர் தாங்கள் கூறியதை ‘‘கடவுள் காட்டிய வழி; ஆண்டவன் கொடுத்த அறிவுரை'' என்று மக்களிடம் சொன்னார்கள் . ஆனால், பெரியார் தான் கூறுவதை ‘‘நான் சொல்லுகிறேன். எனக்கு உண்மையென்று தோன்றியதை உரைக்கின்றேன். உங்கள் பகுத்தறிவென்னும் உரைகல்லிலே உரைத்துப் பாருங்கள். உண்மையிருந்தால் ஒப்புக்கொள்ளுங்கள். உண்மைக்கு மாறாக இருந்தால் உதறித் தள்ளுங்கள். நம்பினால் மோட்சம்; நம்பாவிட்டால் நரகம் என்று நான் சொல்லவில்லை'' என்று தாராளமாகச் சொல்லி வருகிறார். இதுதான் இவருக்கும் மற்றைய சீர்திருத்தக்காரர்களுக்கும் உள்ள வேற்றுமை.


பிடிவாத குணமுடையவர்கள் பொது வாழ்க்கையில் இருந்தாலும் சரி, தனி வாழ்க்கையிலிருந்தாலும் சரி அவர் களுக்கு எதிரிகள் தான் தோன்றுவது இயல்பு. ஆகையால் பெரியார் பல சமயங்களில், பலரால் எதிர்க்கப்பட்டு வருவதில் வியப்பில்லை.


இன்னும் பலர் பெரியாரை எதிர்க்கின்றனர்; அவர் இயக்கத்தை எதிர்க்கின்றனர். இத்தகைய எதிர்ப்பே சிலருடைய பிழைப்பாகவும் ஆகிவிட்டது. கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு இந்த எதிர்ப்பு அவரை எதுவும் செய்து விடாது என்பது தெரியும்.


தனிப்பட்ட முறையில் பெரியாரைத் தாக்கிப் பேசுவ தனால். பழித்து எழுதுவதனால் அவர் புகழ் மங்கி, மறைந்து விடாது. அவர்மீது வசைமொழிகளை வாரியிறைப்பதனால் அவர் கொள்கைகளை அழித்து விட முடியாது.


பெரியாரால் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட கொள்கைகள் இன்று பொதுமக்கள் இயக்கமாக நிலைத்து விட்டது. இந்த நாட்டு மக்கள் ஒன்றுபட்ட தேசிய சமுதாயமாக வாழ்வதற்குச் சுயமரியாதை-திராவிடர் கழகக் கொள்கைகள் அவசியம் என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். ஆகையால் பெரியாரையோ, அவர் கொள்கைகளையோ அழித்து விடலாம் வீழ்த்தி விடலாம். ஒழித்து விடலாம் என்று கனவு காண்பவர்கள் ஒடுங்க வேண்டியதுதான். அல்லது ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.


பெரியார் வாய்ப் பேச்சு வீரர் அல்லர். சொல் வேறு- செய்கை வேறாக இருப்பவர் அல்லர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் குணத்திற்கும் அவருக்கும் வெகு தொலைவு.


தான் கூறியதை, செய்யத் துணிந்ததை உடனுறையும் தோழர்கள் எதிர்த்தாலும், உற்றார் எதிர்த்தாலும், உறவினர் எதிர்த்தாலும் சொல்லியே தீருவார்: செய்தே முடிப்பார். இதை அவருடைய எதிரிகளும் மறுக்க முடியாது.


பெரியார் இந்நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. இந்நாட்டு இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டும் ஓர் ஒப்பற்ற முற்போக்கு சக்தி.


எதிர்ப்புக்கு அஞ்சாத இரும்பு நெஞ்சம்; உண்மை யென்று கண்டதை ஒருவருக்கும் அஞ்சாமல் உரைக்கும் தன்மை. சொல்வதை செயலிலே நடத்திக் காட்டும் துணிகரமான போக்கு. நன்மை யென்று நம்பியதை எவர் எதிர்ப்பினும் நழுவ விடாத பிடிவாதம்; எண்ணியவைகளை எண்ணியவாறே செய்து முடிக்கும் சிறந்த குணம். இவைகள் எல்லாம் பெரியாரிடம் என்றும் பணிந்து நிற்கும் பண்புகள். வருங்காலச் சமுதாயச் சிற்பிகள் பின்பற்ற வேண்டிய சிறந்த குணங்கள் இவை. இன்று பெரியாரை எதிர்க்கும் கும்பல், நாளை அவரைப் போற்றத்தான் போகின்றனர். அவர் செய்துவரும் சேவையின் பலன் எதிரிகளுக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும் எதிர்ப்பிலே முனைந்து நிற்பதற்குக் காரணங்கள் பலவிருக்கலாம். இவர்கள் தங்கள் காலத்திலே பெரியாரைப் போற்றாமல் இருப்பார்களானால், இவர்களுடைய பிள்ளைகுட்டிகள் இவர்கள் செய்யும் தவறுக்குக் கழுவாய் (பிராயச்சித்தம்) தேடிவிடுவார்கள் என்பது உறுதி.''


என்று மிக அழகாக சாமி.சிதம்பரனார் அவர்கள், ‘‘எதிர்நீச்சலிலே வளர்ந்த ஈ.வெ.ரா.'' என்ற ஒரு சிறப்பான நூலில், சிறிய நூலில், அழகாக 40 பக்கத்தில் எழுதியிருக் கிறார். இங்கே நான் எடுத்துக்காட்டியது ஒரு சிறு பகுதிதான்.


சாமி.சிதம்பரனார் அவர்கள், சுருக்கமாக, முத்தாய்ப்பாக சொல்கிற பகுதி இது.


‘‘பெரியாரின் அஞ்சா நெஞ்சம், சிம்ம கர்ச்சனை, எதிரிகளைக் கண்டு உற்சாகத்துடன் எழும்பிப் போராடும் இயற்கைக் குணம், வழக்கம்போல் அவருக்கு வெற்றி யையே கொடுத்தது. எதிர்ப்புகள் அவரை அடக்கிவிடாது. எதிர்ப்பினால் அவர் வளர்ச்சிதான் அடைவார். இதுவே அவரது வாழ்க்கையில் உள்ள ஒரு புதிர். இவ்வுண்மையை அவருடைய ‘‘திருமணமும்'' மெய்ப்பித்து விட்டது!''


‘‘பலமான எதிர்ப்பு இல்லாவிட்டால், பெரியாரின் இயக் கம் இந்நாட்டில் பலமாக வேரோடியிருக்க முடியாது.''


எதிர்ப்பு இருந்தால்,


நாம் வளர்கிறோம் என்று பொருள்!


எனவேதான் நண்பர்களே, எதிர்ப்பு எங்கே இருக் கிறதோ, அஞ்சாதீர்கள். நம்முடைய இயக்கத்திற்கு எதிர்ப்பு இருக்கிறதே என்பதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். எதிர்ப்பு இருந்தால், நாம் வளர்கிறோம் என்று பொருள்.


இதுதான் நாம் அய்யா அவர்களுடைய வாழ்க்கையில், எதிர்நீச்சலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய மகத்தான பாடமாகும்.


இளைஞர்கள் இந்தப் பாடத்தை மறக்கக்கூடாது. அந்தப் பாடத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமானது.


- தொடரும்


No comments:

Post a Comment