மருத்துவ மாணவர்களுக்கான காணொலிக் காட்சியில் கலந்து கொண்ட மருத்துவர்களின் பிரதிபலிப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 8, 2020

மருத்துவ மாணவர்களுக்கான காணொலிக் காட்சியில் கலந்து கொண்ட மருத்துவர்களின் பிரதிபலிப்புகள்

ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, நான் கீழப்பாவூர் அய். இராமச்சந்திரன் - சு.உமா இணையரின் மகள்.


நான் சிறு வயது முதலே தந்தை பெரியாரின் கொள் கைகள் புகட்டப்பட்டு, திராவிடர் கழகப் போராட்டங் களை அறிந்து, ஆசிரியரின் எழுச்சிமிகு பேச்சினை பல கூட்டங்களில் கேட்டு வளர்ந்தவள். இன்று நான் மருத்துவம் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி. ஆசிரியர் அவர்கள் 'மருத்துவக் கல்வியில் சமூக நீதி' என்னும் தலைப்பில் வகுப்பெடுத்த காணொலி சந்திப் பில் இணையும் வாய்ப்பைப் பெற்றேன்.


சிறுவயது முதலே பலமுறை ஆசிரியர் அவர்கள் 'சமூகநீதி' என்னும் தலைப்பில் பயிற்சி முகாமில் வகுப் பெடுப்பதை நான் கவனித்திருக்கிறேன். அப்போது அதைப் பற்றிய புரிதல் பெரிதும் இல்லாவிட்டாலும் கல்லூரியில் சேர்ந்த பின்பு நன்கு புரிய ஆரம்பித்தது.


அய்யா அவர்கள் நீதிக்கட்சி காலம் தொட்டு - சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவக்கல்வி, தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் காலேஜ் கமிட்டியைத் தடை செய்தல், நேர்காணலில் 150 மதிப் பெண்களை 50 ஆக குறைத்தல் முதல் இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் நீட் வரைக்கும் பார்ப்பனர் கள் நம்மவர்களை மருத்துவக் கல்வியைப் படிக்க விடாமல் தடுக்கச் செய்த சூழ்ச்சிகள் அனைத்தையும் தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.


இன்றைய இளம் தலைமுறையினர் நம் இயக்கம் போராடிப் பெற்றுத்தந்த அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கின்றனரே தவிர இந்நிலையை எவ்வாறு அடைந்தோம் யாரால் அடைந்தோம், என சிந்தித்து வரலாற்றைத் தெரிந்து கொள்ள முற்படுவதில்லை.


நான் மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட போது என்னைவிட சற்று குறைவாக கட்-ஆப் எடுத் தும் என்னைவிட நல்ல கல்லூரியில் இடம் கிடைத்த ஒடுக்கப்பட்ட மாணவ-மாணவியர் உண்டு. என்னை விட சமுதாயத்தில் பின்தள்ளப்பட்டு எனக்குக் கிடைக் கப்பெற்ற மேம்பட்ட கல்வியும் சகல வசதிகளும் கிடைக்காத போதிலும், சிறந்த கல்லூரியில் படிக்க இடம் கிடைத்து சமுதாயத்தில் முன்னேறுகிறார்கள் என நினைக்கும்போது நம் இயக்கம் பெற்றத் தந்த உரிமைகள் வீண்போகவில்லை என நினைத்து பெருமிதம் கொண்டேன். எனினும், எனக்கு இந்த புரிதல் பிறரிடம் இல்லை. காரணம், வரலாறு அறியாத வர்கள் என்பதே!


ஜாதியின் பெயரால் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு பின்தள்ளப்பட்ட நாம் அதன் அடிப்படையிலேயே இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னேறி வருகிறோம். இன்று நாம் அடைந்த வெற்றியைக் கண்டு பொறுக்க முடியாத பார்ப்பனர்கள், மருத்துவக் கல்வியில் 'தகுதி' என்னும் முகமூடி போட்டுக்கொண்டு தமிழகத்தில் 100 ஆண்டு காலம் நம் இயக்கம் பொதுநலனை மட்டுமே கருத்தில் கொண்டு களத்தில் நின்று போராடியதின் விளைவாய் தாங்கள் உருவாக்கித் தந்த பல்வேறு மருத்துவ இடங்களை 'நீட்' என்னும் பெயரால் பிற மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கப் பார்க்கிறது மத்திய அரசு. இதையும் சமூக நீதிக்கு இடையூறாக இனி வரும் எதையும் தந்தைப் பெரியாரின் கைத்தடி கொண்டு தாங்கள் விரட்டி அடிப்பீர்கள் என்பதில் அய்யம் ஏதும் எங்களுக்கு இல்லை ..!


9 வயது முதல் 86 வயது வரை எங்களுக்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியரே...!


அவ்வப்போது பேரன் பேத்திகளாகிய எங்களைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாது தங்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் அய்யா..!


இச் சமுதாயத்தின் சொத்து தாங்கள்..! உங்களின் உடல்நலத்தைக் காப்பதில் மருத்துவர்கள் ஆகிய எங்களுக்கு மிகுந்த அக்கறை உண்டு. நீங்கள் இடும் கட்டளைக்கு இணங்க சமூகப்பணி ஆற்ற என்றும் தயாராக இருக்கிறோம் அய்யா உங்கள் பேரன் பேத்தி களாகிய நாங்கள்...!


வாழ்க பெரியார்.! வளர்க பகுத்தறிவு..!


- கீழப்பாவூர் உ இரா.மணிமொழி


மருத்துவம் இறுதியாண்டு,


மாதா மருத்துவக் கல்லூரி, குன்றத்தூர், சென்னை.


- - - - -


சமூக நீதிக் களத்தில் இளைய சமுதாயத்தின் உரிமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அறிவு ஆசான் தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து  பாடுபட்டு வரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு பெரியார்  மருந்தியல்  கல்லூரியின் திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக அன்பான, நன்றி கலந்த வணக்கங்கள்!


' மருத்துவக் கல்வியில் சமூக நீதி' என்ற தலைப்பில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கருத்துக் களை - இன்னும் சொல்லப் போனால் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளை சிறப்பாக எடுத்துரைத்தீர்கள்!


புரட்சி விதைகளை நம் சமுதாயத்தில்  பாடலினால்  விதைத்த புரட்சிக் கவி என்பது  பாரதிதாசன் அவர் களுக்கு பொருத்தமான ஒன்று என்று பேச்சின்  ஆரம் பத்திலேயே சமூக நீதியை நிலை நாட்டினீர்கள்.  பாரி னில்  பூத்துக் குலுங்கும் சோலையாக இட ஒதுக்கீட்டை யும், சோலைகள் உருவெடுக்க பாடுபட்ட விவசாயி களை இடஒதுக்கீட்டிற்காக பல்வேறு தியாகங்களையும் போராட்டங்களையும்  நடத்திய தலைவர்களையும் ஒப்புமை காட்டிய விதம் எங்களையெல்லாம்  திகைக் கச் செய்தது.


சமஸ்கிருதம் அறிந்தவர்களுக்குத்தான்  மருத்துவக்  கல்வி என்ற சமூக அநீதியை களைந்ததோடு மட்டு மல்லாமல், சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற ஆரிய சூழ்ச்சிதனை முறியடித்த வரலாற்றினையும் நாங்கள் நன்கு தெரிந்து  கொண்டோம்.


உயர் ஜாதியினர் மட்டுமே அலங்கரித்த கல்வி மற் றும் வேலை வாய்ப்பு கோட்டையைத் தகர்த்தெறிந்து மக்கள்  மன்றத்தினை ஒன்று திரட்டி வகுப்புவாரி உரி மைச் சட்டம் என்ற இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்  முதல் சட்டத் திருத்தத்தை  கொண்டு வந்த சமுதாயச் சிற்பி தந்தை பெரியார் அவர்களின் மண் டைச் சுரப்பையும் போர்க்குணத்தையும் எண்ணிப் பார்க்கிறோம்!


சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக எத்தகைய தலைமையையும் எதிர்த்து நின்ற அய்யா அவர்களின் வரலாறு எங்களை பிரம்மிக்கச் செய்தது.


இன்று நம் இன மக்கள் மருத்துவர்களாக, பொறி யாளர்களாக, நீதியரசர்களாக, பல்துறை வல்லுநர்களாக திகழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள். அய்யா அவர்களுக்குப் பின் சமூக நீதிக்கு பங்கம் வரும்போதெல்லாம் அதற்கு சரியான பதிலடி கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு  சட்ட ரீதியான தீர்வையும் வழங்கி வருவது தாங்களும் தங்கள் தலைமையில் நடைபெறும் திராவிடர்  கழகமும் தான்.


சமூக அநீதி நடைபெறுவதை சுட்டிக் காட்டவும் மக்களை தட்டி எழுப்பவும்  திராவிடர் கழகமும் அதன் தலைவரும் இல்லையென்றால் நம் நாடு உரிமைகளற்ற ஆரிய அடிமை நாடாக மாறியிருக்கும். தகுதி, திறமை என்று பேசுவதற்கு முன்  வாய்ப்பு வழங்குவது பற்றி சிந்திப்பது தான் அறிவுடைமை என்று குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை.


தந்தை பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி கொண்டு அனைத்தையும் பார்த்தால் தான் நமக்கு பின்னால் நடைபெறும்  சூழ்ச்சிகளும் தந்திரங்களும் புலப்படும் என்பதனை நாங்கள் புரிந்து கொண்டோம்!


அய்யா தங்களின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள்  மன்றங்களிலே இக்கருத்துக்களை கொண்டு சேர்ப்போம்!


தங்களது  தலைமையில்  பெரியார் காட்டிய வழி யில் சமத்துவ சமுதாயம் உருவாக பாடுபடுவோம்!


வே. அருண்  நிவாஸ்


முதுநிலை மருந்தியல் (இரண்டாமாண்டு)


திராவிட  மாணவர் கழகம்,


பெரியார் மருந்தியல்  கல்லூரி, திருச்சி - 21.


- - - - -


ஆசிரியர்  அய்யா அவர்களுக்கு வணக்கம்.


05.07.2020, ஞாயிற்றுக்கிழமை  மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழகம், 'மருத்துவக் கல்வியில் சமூக நீதி' என்னும்  தலைப்பில் ஒழுங்கு செய்திருந்த காணொலி சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு மருத்துவத் துறையில் பயிலும்  மாணவர்களுக்கும், மருத்துவராக பணிபுரிபவர்களுக்கும் மருத்துவக் கல்வியில் சமூக நீதியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பாக  உரையாற்றினீர்கள்.


சமூகத்தில் இருக்கும் கொடியவர்களால் எப்படி  மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது என்ற உண்மையையும், வரலாற்று ரீதியான  கருத்துகளையும் எடுத்துரைத்த தோடு நீட் தேர்வு என்ற சமூக அநீதி பற்றி தெளிவாக  விளக்கமளித்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.


செ. இருதயசாமி


இளநிலை மருந்தியல் (நான்காமாண்டு)


திராவிட மாணவர்  கழகம்


பெரியார் மருந்தியல்  கல்லூரி, திருச்சி - 21.


கடிதங்கள் நாளையும் தொடரும்


No comments:

Post a Comment