மருத்துவக் கல்வி: பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மிகவும் அவசியம்! பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

மருத்துவக் கல்வி: பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மிகவும் அவசியம்! பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்!


மருத்துவக் கல்விப் படிப்பில் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்படும் இடங்களில் அகில இந்திய தொகுப்பில், பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 3.7.2020 தேதியிட்ட ஆங்கில கடிதத்தின் தமிழாக்கம்:


’நீட்’ தேர்வின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத் துவக் கல்வி நிலையங்களில் இருந்து அகில இந்திய தொகுப்பு நிரப்பப்படுவதில், பிற்படுத்தப் பட்டோர்க்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருவதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.


மத்திய அரசு மற்றும்  மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவக் கல்வி நிலை யங்களில் அகில இந்திய தொகுப்புக்கு, எஸ்.சி., எஸ்.டி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி யோர்க்கு முறையே 15%, 7.5%, 10% இடங்கள் ஒதுக்கப்படுகிறது.


ஆனால், பிற்படுத்தப்பட்டோர்க்கு, அகில இந்திய தொகுப்பில், மத்திய அரசு கல்வி நிலையங்களில் மட்டுமே தரப்படுகிறது. அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு 2017 முதல் தொகுத்துள்ள விவரங்களின்படி, அகில இந்திய தொகுப்பில் மாநில அரசு / யூனியன் பிரதேச மருத்துவக் கல்வி நிலையங்களில்


இட ஒதுக்கீடு அளிக்காத காரணத்தினால், 11,000 இடங்களுக்கு மேல் பிற்படுத்தப்பட்டோர் இழந்துள்ளனர்.



சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னேறிட வழிவகை செய்யும் வகையில், சிறுபான்மை கல்வி நிலையங்கள் தவிர்த்து ஏனைய அரசு உதவி பெறும் அல்லது பெறாத தனியார் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில், சிறப்புப் பிரிவுகளை 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் உருவாக்கி யுள்ளது.


 மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய தொகுப்பில் மாநில மருத்துவக் கல்வி நிலையங்களில், பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு மறுப்பது, 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் நோக்கத்தை மீறுவதாகும்; தகுதி பெற்ற பிற்படுத்தப்பட்டோர் மருத்துவக் கல்விப் படிப்பை அணுகிட தடையை ஏற் படுத்துவதாகும்.


சமூகநீதி மற்றும் சமத்துவ நலனைக் கருத் தில் கொண்டு, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான இடங்களில் அகில இந்திய தொகுப்பில், பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.


- இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


ராகுல் காந்தி - டிவிட்டரில்...


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கடிதத்தை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,


‘சமூக நீதிக்கு இட ஒதுக்கீடு முக்கியமானது. மாநில் அரசு / யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவக் கல்வி நிலையங்களில் அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோளை நான் முழு மையாக ஆதரிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment