பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரின் பொய்யான தகவல்!
புதுடில்லி, ஜூலை 3 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சமூகவலைதளத்தில் ஒரு குழந்தை இறந்த மனி தரின்மீது அமர்ந்திருந்த படத்தைப் போட்டு, ‘‘இதோ தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தந் தையின் உடலில் உட்கார்ந் திருக்கும் சிறுவனைப் பாருங்கள்'', என்று கூறி ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது மறைமுகமாக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருந்தார்.
உண்மையில் அந்தப் படத்தில் இறந்து கிடப்பது வயதான ஒருவர். அவரது பேரன் தான் அவர் உட லருகில் இருக்கிறார். இது செய்தியாக வந்துள்ளது, ஆனால், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், இதுபோன்று ஒரு பொய் யான செய்தியை போட்டு, பதட்டத்தை உருவாக்க முயல்கிறார். பொய்யான தகவலைப் பரப்புவோர் மீது பாயும் எந்த வழக்குமே இவர்மீது பதிவு செய்யப் படவில்லை.
இதே நேரத்தில் முழு ஊரடங்கின் போது 450-க் கும் மேற்பட்டோர் சாலை களிலும், ரயில் நிலையங்களி லும் பிணமானார்கள். பீகார் ரயில் நிலையம் ஒன் றில் இறந்து கிடந்த தாயின் உடலில் போர்த்தியிருந்த துணியை விலக்கி ‘‘அம்மா எனக்குச் சாப்பாடு கொடு'' என்று கேட்ட 3 வயதுச் சிறுவன் குறித்து இவர்கள் கவலைப்படவில்லை.
ரயில் நிலையத்தில் பிண மாகக் கிடந்த தாயின் மார் பிலிருந்து பசியால் பால் குடிக்க முயன்ற குழந்தை குறித்து இவர்கள் கவ லைப்படவில்லை. ஆனால், ஜம்முகாஷ்மீரில் நடந்தால் மட்டுமே இவர்கள் கவ லைப்படுவார்கள்; கார ணம் அங்கு நடந்தவைகள் குறிப்பிட்ட மதத்தினரால் நடப்பவைகள் என்று இவர் களால் ஒரு பொய்யான தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.
No comments:
Post a Comment