ஒவ்வொரு முறையும் வியப்பில் ஆழ்த்துகிறார் தமிழர் தலைவர்!
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னரும் எவ்வித தொய்வும் இல்லாமல் இந்தியாவில் ஓர் இயக்கம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது என்றால் அது திராவிடர் கழகம் மட்டும் தான். ஓர் அறிவியல் இயக்கம் இந்த நெருக்கடியான காலகட்டத்தை எப்படி பயனுள்ள முறையில் மாற்றிக்கொள்வது என்பதை தெரிந்து வைத்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தன்னிச்சையாக திராவிடர் கழகத் தோழர்கள் இணை யத்தின் மூலம் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். திராவிடர் கழகத் தலைவரோ பல்வேறு அமைப்புக் களின் இணையக் கூட்டங்களில் கலந்து கொள்வதுடன் தொடர் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார்
எனது இந்தப் பதிவு அவரின் கருத்துச் செறிவான வரலாற்றுப் பதிவுகளாக வரும் அவரது உரை குறித்து அல்ல. அவர் க்ஷ்ஷீஷீனீ செயலியைப் பயன்படுத்தும் முறை குறித்தது. ஊரடங்கு காலத்திற்குப் பின்னரே அந்த செயலியைப் பயன்படுத்துவது குறித்து அறிந்திருந் தேன் .கடந்த மூன்று மாதங்களாக பல கூட்டங்களை கேட்டிருக்கிறேன் . பல ஜூம் கூட்டங்களில் பேசியும் உள்ளேன். ஜூம் இல் உரையாற்றுவது ஒரு வகைக் கலை. ஆளே இல்லாத இடத்தில் ஒரு சிறிய கணிப் பொறி முன்னால் அமர்ந்து கேட்பவர்கள் செரித்துக் கொள்ளும் வண்ணம் உரையாற்ற வேண்டும்.
அதிலும் நமது முகம் கேமிராவில் முழுவதாகத் தெரியும் வண்ணம் உரையாற்ற வேண்டும் . நான் பல கூட்டங்களில் பேச்சாளரின் தலை, முகத்தின் ஒரு பகுதியை மட்டும் பார்த்துக்கொண்டு பேச்சை கேட் டிருக்கிறேன். நாம் பேசுவதை மற்றவர்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்களா? என்ற சந்தேகத்துடன் பேசுவது, அடிக்கடி mute ஆவது, இடையிடையே பல்வேறு சத்தங்கள் எழுவது, முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு பேசுவது போன்றவை ஜும் கூட்டங்களில் இயல்பாக நடக்க கூடியவை என்று நாம் அனைவரும் அறிவோம்
ஆனால் இத்தகைய சிக்கல்கள் எதுவும் இல்லாமல் ஒவ்வொருவரையும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு பேசுவது போன்ற கூட்டம் ஒன்று நடக்கிறதென்றால் அது திராவிடர் கழகத் தலைவரின் கூட்டம் தான்.
அவர் பேசுவது நம்மை பார்த்துக்கொண்டே பேசு வது போல் இருக்கிறது. ஒரு நூலை எடுத்து ஆதாரம் காட்டிப் படிக்கும்போது மாணவருக்கு பேராசிரியர் வகுப்பு எடுப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. கூட்டம் முடிந்து கலந்துரையாடும்போது ஒவ்வொரு வரின் வீட்டில் இருப்பவர்களின் நலன் விசாரிக்கும் போது பாசத்தலைவரால் ஏற்படும் நெகிழ்ச்சி வார்த் தைகளால் கூறமுடியாத ஒன்று.
அவரால் மட்டும் எப்படி முடிகிறது? புதிய தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப இவர் தன்னை எப்படிச் செதுக் கிக் கொள்கிறார்? கடவுள் சிலைகளே கதவை சாத்திக் கொண்டு இருக்கையில் கழகத்தலைவர் அறிவியல் துணைக்கொண்டு பிரச்சாரம் நடத்துகிறாரே எப்படி இது சாத்தியம்? ஒவ்வொருமுறையும் என்னை வியப் பில் ஆழ்த்துகிறார் தமிழர் தலைவர் !
- பழ.பிரபு
- - - - -
வணக்கம்.
நானும் மற்ற மாணவர்களைப் போல இட ஒதுக்கீடு என்பது பற்றி தெரியாமல் தான் கலந்தாய்வு சென்றேன். அன்று ஆசிரியர் பேச்சை கேட்ட பிறகு இட ஒதுக் கீட்டின் அவசியத்தை புரிந்து கொண்டேன்.
அன்று ஆசிரியர் பேச்சை கேட்டது வரலாற்றை மறுபடியும் திருப்பிப் பார்த்ததாக இருந்தது. முன்பு இருந்த காலத்தில் சமஸ்கிருதம் தெரிந்த ஆட்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை இருந்து உள்ளது. ஆனால் அந்த மொழியை உயர் வகுப்பினர் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை இருந்துள்ளது. பெண்கள் படிக்கவும் அனுமதி இல்லை. இது இந்த சமூகத்தில் பெரிய அநீதியாக இருந்துள்ளது.அது பல பேரின் போராட்டத்தாலும், முயற்சியாலும் வீழ்த்தப் பட்டு நமக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்கப் பட்டுள்ளதை அறிய முடிந்தது.
நான் இதற்கு முன் ஆசிரியரின் பேச்சைச் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான கூட்டத்தில் கேட்ட பொழுது adequately என்ற வார்த்தையைச் சட்டத்திலிருந்து எடுத்துக் கூறி இருந்தார். அப்பொழுது தான் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம் புரிந்தது. அதில் அவர் ஒரு மேடு - ஒரு பள்ளம் இருந்தால் மணலை பள்ளத்தில் கொட்டினால் தான் அது மேட்டிற்குச் சமமாகும். மேட்டில் கொஞ்சம், பள்ளத்தில் கொஞ்சம் கொட்டினால் மேடு-பள்ளம் சமமாகாது என்று எளி மையான விளக்கம் தந்தார்!
முற்றிலும் உண்மைத் தகவல்களை நிறைய அறிந்து கொண்டேன். வாய்ப்புக்கு மிக்க நன்றி.!!
- திருமாற முத்து விநாயக்,
MBBS முதலாமாண்டு
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி.
ஊர்:சிவகிரி
No comments:
Post a Comment