அன்பு நிறை ஆசிரியர் அவர்களுக்கு:
தங்களது ஒவ்வொரு உரையும் தனித்தன்மை வாய்ந்ததாக அமை வதை, கேட்போர் அனைவரும் உணர்வார்கள். பல்லாயிரக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், காணொலியாகவும் தங்கள் உரை அமைந்திருப்பதால், வகுப்பறையில் அமர்ந்து ஆசிரி யரின் உரையை நேரில் கேட்பதாக அமைந்திருக்கிறது. காலங்காலத் திற்கும் இவ்வுரைகள், ஒப்பற்ற தலைவர் அறிவுலகப்பேராசான் தந்தை பெரியார் கொள்கைகள், செயல்பாடுகளை விளக்கும், வழிகாட்டும். ஒப்பற்ற தலைமையை விளக்க ஓர் ஒப்பற்ற ஆசிரியர் கிடைத்தது, எங்களுக்கெல்லாம் மிகப்பெரும் வாய்ப்பு.
வரியியல் அறிஞர் ராசரத்தினம் அய்யா அவர்களைப் பற்றி புதிய செய்திகளைத் தங்களது இன்றைய உரைமூலம் தெரிந்து கொண்டோம். வாழ்வாதாரப் பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் செய்யவேண்டிய தொண்டறத்திற்கு, ராசரத்தினம் அய்யா ஓர் எடுத்துக்காட்டு.
இன்றைய உரையில் தாங்கள், தந்தை பெரியார் தன்னையே விமர்சித் துக்கொண்டதும், அன்னை மணியம்மையாரைத் திருமணம் செய்யுமுன் ஆண்டுக்கணக்கில் முழுநேரப்பணியாற்றும் ஒரு பெண்மணி கிடைக்கா சூழலிருந்ததும் புதிய செய்திகள். பொது மக்கள் மன நிலை, அரசியல், சரியான தொண்டால் வரும் அவதூறுகள் போன்றவற்றைப் பற்றி தந்தை பெரியாரின் கணிப்புகளை உணர்வும் அறிவும் பொங்கும்வண்ணம் இன்றைய உரையில் எடுத்து விளக்கினீர்கள்.தங்களது அடுத்த உரையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
அரசு செல்லையா, மேரிலாந்து, அமெரிக்கா
No comments:
Post a Comment