மோடியின் உண்மை முகம் குறித்து திலீப் மண்டல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
“நரேந்திர மோடியின் உண்மை முகத்தைப் பார்க்க வேண்டுமென்றால், அவர் நியமித்த பதவிகளைப் பாருங்கள். எதிலுமே இட ஒதுக்கீடும் இல்லை. அதைக் கடைப்பிடிக்கவும் இல்லை. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பழங்குடியினருக்கு அங்கு இடமும் இல்லை.
எடுத்துக்காட்டாக, மோடி பதவி ஏற்ற பிறகு, பிரதமர் அலுவலகம், பன்னாட்டுத் தூதர்கள் நியமனம், துணை வேந்தர்கள் நியமனம், வங்கித் தலைவர்கள், இயக்குநர்கள், நிதி ஆலோசனைக் குழுத் தலைவர்கள், நிதி ஆயோக் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை நிர்வாகி மற்றும் அமைச்சரவைச் செயலாளர்கள் என எந்தப் பதவியிலுமே கடந்த
7 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படவே
இல்லை.
அவர் நினைத்தால் மேலே குறிப்பிட்ட பதவியில் இட ஒதுக்கீட்டின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் தகுதியானவர்கள் பலரை அங்கே நியமித்திருக்க முடியும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. இதுதான் அவரது உண்மை முகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment