ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 8, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை: மத்திய அர சுக்கு ராகுல் காந்தி கேள்வி

  • இந்திய - சீன எல்லையில் கல்வான் பகுதியில், இரு நாட்டு உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையின்படி, இரு நாட்டு ராணுவமும் 2 கி.மீ. பின் வாங்கியுள்ளனர் என்பதாக செய்திகள் வந்துள்ளது. ஆனால், நமது எல்லையில் இருந்து நாம் ஏன் பின் வாங்க வேண்டும் என்பது கவலை அளிக்கும் விசயமாக உள்ளது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • அமெரிக்கக் குடியேற்றத் துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ‘செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான செமஸ்டர் தேர்வுக்கான வகுப்புகளை முழுமையாக ஆன்லைனில் எடுக்க உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது. அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்,’ என எச்சரிக்கப் பட்டுள்ளது.


மேலும், ‘அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவது முற்றிலும் நிறுத்தப்படும்,’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தி இந்து:



  • 2020-21ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான பாடத் திட்டத்தைக் 30 சதவிகிதம் குறைத்து சி.பி.எஸ்.இ. விரை வில் அறிவிப்பை வெளியிட உள்ளது. இதில், கூட்டாட்சி, குடி யுரிமை, மதச்சார்பின்மை, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சிக்குரியதாகும்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் இரட்டைக் கொலை வழக்கு சிறப்புப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரித்து வருகிறது.

  • தனியார்மயமாக்கலும், பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் வலுவிழப்பும், இட ஒதுக்கீட்டைக் குறைமதிப்பீட்டிற்கு உள்ளாகி யுள்ளது என பேராசிரியர்கள் கிறிஸ்டபி ஜாப்ரிலெட் - கலை யரசன் இணைந்து எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்கள்.

  • அமெரிக்கர்கள் ஜாதியை என்றும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் அண்மையில் சிஸ்கோ நிறுவனத்தில் ஜாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு காரணமாக அந்த நாட்டிலும் ஜாதிப் பாகுபாடுகள் நடைபெறுவதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என கட்டுரையாளர் அமிர்தா தத்தா எழுதியுள்ளார்.


- குடந்தை கருணா


8.7.2020


No comments:

Post a Comment