கிங்ஸ்வில்லே, ஜூலை 13- அமெரிக்கக் கடற்படை வர லாற்றில் முதல் முறையாக, போர் விமானத்தை இயக்கு வதற்கு கருப்பினப் பெண் பைலட் தேர்வாகி இருக்கி றார்.
உலகின் மிகச்சிறந்த விமா னப்படையைக் கொண்டுள்ள அமெரிக்காவில், கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக ரோஸ்மேரி மெரி னர் என்ற பெண் பைலட், போர் விமானத்தை இயக்கத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், அமெரிக்காவின் முதல் பெண் போர்விமானி என்ற பெருமையை அவர் பெற்றார். இந்நிலையில், அமெரிக்கக் கடற்படையில் முதல் முறையாக போர் விமானத்தை இயக்குவதற்குக் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் பெண் பைலட்டாக, ஜே.ஜி. மெடலின் ஸ்விக்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், வெர்ஜினியா மாகா ணத்தில் உள்ள பர்கே என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
அமெரிக்கக் கடற்படை பயிற்சி மய்யத்தில் 2017ல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், கடற்படை விமானப் படை பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெற்றார். கடற்படை போர் விமானங்களை இயக் குவதற்கான முறையான அனுமதி, இம்மாத இறுதியில் மெடலினுக்கு வழங்கப்பட உள்ளதாக, அமெரிக்க கடற் படையின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment