மகளிருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வேலைவாய்ப்பு திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 8, 2020

மகளிருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வேலைவாய்ப்பு திட்டம்

சென்னை, ஜூலை 8-  மகளிருக்கான தொழில் முனை வோர் நிறுவனமான பிரிட்டா னியா மேரி கோல்ட் மை ஸ்டார்ட் அப் பிரச்சாரத்தின் பத்து வெற்றி யாளர்களை அறிவித்தது.


இந்த முன்முயற்சியின் கீழ், 10 வெற்றியாளர்களுக்கு அவர் களின் வணிக முயற்சிகளைத் தொடங்க தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பிரிட்டானியா மேரி கோல்ட் மை ஸ்டார்ட்அப் என்பது ஆர்வமுள்ள மகளிர் தங்கள் தொழில் முனைவோர் கனவுகளுக்கு உள்ளீடுகளை வழங்குவதற்கும், நிதி ரீதியாக சுயாதீனமாக மாறுவதற்கும், தங் களை வேலை படைப்பாளர்களாக மாற்றுவதற்கும் ஒரு தளமாகும். நிதி உதவிக்கு மேலதிகமாக, பிரிட்டானியா மேரி கோல்ட் மை ஸ்டார்ட் அப் முன்முயற்சியின் தற்போதைய பதிப்பு 10,000 மக ளிர்களுக்கு தேசிய திறன் மேம் பாட்டுக் கழகத்துடன் (என்.எஸ்.டி.சி) இணைந்து இந்தியாவின் முதல் தனிப் பயனாக்கப்பட்ட இணையத்தில் மூலம் திறன் மேம் பாட்டுத் திட்டத்திற்கு அணுகலை வழங்குகிறது. இணையத்தின் மூலம் பாடநெறி இந்த மகளிர் களுக்கு தேவையான தொழில் முனைவோர் திறன்களை அளிக் கிறது என  இந்நிறுவன சந்தைப் படுத்தல் தலைவர்  வினய் சுப்பிர மண்யம் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment