கரோனாவின் மோசமான பாதிப்பு இனிதான் இருக்கிறது : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

கரோனாவின் மோசமான பாதிப்பு இனிதான் இருக்கிறது : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை


ஜெனீவா, ஜூலை 1 கரோனா வைரசின் மிக மோசமான தாக்கம் இனிதான் ஏற்படப் போகிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


சீனாவின் வூகான் நகரில் கரோனா தாக் கம் கண்டறியப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் உலகெங்கிலும் சுமார் 1 கோடி பேருக்கு மேல் இந்த தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் கரோனா பாதிப்புக் குறித்து பேசிய உலக சுகாதார நிறு வனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என கவலை தெரிவித்தார். தற்போது இருப்பதைக் காட்டிலும், வைரசின் மோசமான பாதிப்பை உலகம் இனிதான் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.


கரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணி களோடு அது உருவாகிய இடத்தை கண்டறி வதும் அவசியம் என்பதால், சீனாவுக்கு குழு ஒன்றை அனுப்பவிருப்பதாகவும் அதானோம் கூறியுள்ளார்.


இந்த வைரஸ் எப்படி பரவத்தொடங்கியது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களை யும் தெரிந்து கொண்டால் தான் அதற்கு எதிராக சிறப்பாக போராட முடியும், அப் போதுதான் எதிர்காலத்துக்காக நாம் தயா ராக முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment