இந்தியப் பணியாளரின் ஜாதி அடிப்படையில் பணிப் பாகுபாடு காட்டுவதாக சிஸ்கோ நிறுவனம்மீது கலிபோர்னியா மாநில அரசு குற்றச்சாட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 3, 2020

இந்தியப் பணியாளரின் ஜாதி அடிப்படையில் பணிப் பாகுபாடு காட்டுவதாக சிஸ்கோ நிறுவனம்மீது கலிபோர்னியா மாநில அரசு குற்றச்சாட்டு!

ஓர் இந்திய - அமெரிக்கப் பணியாள ருக்கு எதிராக, அவர் தங்களை விட தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர் என்ப தால் பணிப் பாகுபாடு காட்டுவதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று  சிஸ்கோ சிஸ் டம்ஸ்  இன்கார்ப்பரேட் நிறுவனத்தின் மீது கலிபோர்னியா மாநில கட்டுப்பாடு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


குறிப்பாக ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டினை கலிபோர்னியாவின் அரசுத் துறை தடை செய்து இருக்க வில்லை. என்றாலும், இந்து மதத்தில் என்றுமே அழியாமல் நிலை பெற்றி ருக்கும் ஜாதி நடைமுறை என்பது மதம் போன்ற பாதுகாக்கப்பட்ட பிரிவுகளின் அடிப்படையில் அமைந்தது என்றாலும்,  கலிபோர்னியாவின் நியாயமான பணி மற்றும் வீட்டு வசதித் துறை, தாங்கள் பதிவு செய்துள்ள வழக்கின் மனு ஒன்றில் ஜாதிப் பாகுபாடு குறித்து தெரிவித்துள்ளது.


சான் ஜோஸ் கூட்டாட்சி நீதிமன்றத் தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் மனுவில், இவ்வாறு பணியில் பாகுபாடு காட்டப்பட்டதால் பாதிக்கப்பட்டவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும் அவர் 2015 அக்டோபர் மாதம் முதல் சான் ஜோசில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையிடத்தில் ஒரு முதன்மைப் பொறியா ளராகப் பணியாற்றி வருகிறார் என்றும்,  ஏற்றத் தாழ்வில் அமைந்த ஜாதி நடை முறையில் அடிமட்ட ஜாதியான, தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப் பட்ட  ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த வர் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.


சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந் துள்ள இதர மிகப்பெரிய  நிறுவனங்களில் ஒன்றான சிஸ்கோவின்  பணியாளர் படையில் குடிபெயர்ந்த ஆயிரக்கணக் கான இந்தியர்கள் பணியாற்றி வருகின் றனர். அவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பன ஜாதியிலும், இதர உயர்ஜாதி களிலும் பிறந்தவர்கள் ஆவர்.


ஜாதி ஏற்றத் தாழ்வுகளை நிறுவனத் தில் கடைப்பிடித்ததன் மூலம் தாழ்த்தப் பட்ட ஜாதி  பணியாளர்களுக்கு தீங்கி ழைத்து வருவதாக சிஸ்கோ நிறு வனத்தின் மேனாள் பொறியியல் மேலா ளர்களான சுந்தர் அய்யர் மற்றும் ரமண கோம்பெல்லா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்த வழக்கில்  எழுப்பப்பட்டுள்ள பணியாளர்களின் கவலைகளைப் பற்றி விசாரணை செய்யும் நடைமுறையை நெட்ஒர்க் கீழ் மேக்கர் பின்பற்றி வரு வதாகவும்,  இந்த வழக்கினை நிறுவனம் தீவிரமாக எதிர்த்து வழக்காடும் என்றும்  சிஸ்கோ நிறுவனத்தின் செய்தித் தொடர் பாளர்  ராபின் பிளம் கூறியுள்ளார்.


அனைத்துப் பணியாளர்களையும் உள்ளடக்கிய ஒரு பணியிடமாக நீடித்துச் செயல்பட சிஸ்கோ நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்றும்,  எங்களது நிறுவ னத்தின் சொந்தக் கொள்கைகளையும், அதைப் போலவே நாட்டின் அனைத்து சட்டங்களையும் முழுமையாக நாங்கள் பின்பற்றி வருகின்றோம் என்றும் கூறி னார். இதுபற்றி கருத்து தெரிவிக்கும்படி கேட்டபோது சுந்தர் அய்யரும், ரமணா கோம்பெல்லாவும் உடனடியாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இவர்கள் இருவரும் தங்களுக்காக வாதாடுவதற்கு வழக்குரைஞர்களை நியமித்துக் கொண்டுள்ளனரா என்பதும் உடனடியாகத் தெரியவில்லை.


இந்த வழக்கின் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ள ‘இக்குவாலிட்டி லேப்ஸ்' (Equality Labs) என்ற சிவில் உரிமைக் குழுவின் 2018 அறிக்கையில்,  இதுபற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அமெ ரிக்க நிறுவனப் பணி களில் பணியாற்றும் ‘தலித்' பணியாளர்களில் 67 சதவிகிதப் பணியாளர்கள், தாங்கள் நியாயமற்ற முறைகளில் நடத்தப்பட்டிருப்பதாக உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.


தன்னுடன் பணிபுரிபவர்களிட மிருந்து தன்னை ஒரு ‘தலித்' என்று சுந்தர் அய்யர் தள்ளி வைத்தார் என்று 2015 நவம்பர் மாதத்தில் மனிதவள மேம்பாட்டு அமைப்புக்கு பெயர் குறிப்பிடாத ஒரு  பணியாளர் புகார் அளித்துள்ளார். அந்தக் குற்றச்சாட்டினை அய்யர் மறுத்த தாகக் கூறப்படுகிறது. என்றாலும், ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல என்று சிஸ்கோ நிறுவனம் முடிவு எடுத்தபடியால், இந்தப் பிரச்சினைகள் 2018-லும் தொடர்ந்து கொண்டே வந்துள்ளன என்று இந்த வழக்கின் மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.


அந்தப் பணியாளருக்கு ஒரு மாற்றுப் பணி அளித்து, அவரைத் தனிமைப்படுத் திய சிஸ்கோ நிறுவனம் அவருக்கு ஒரு பதவி உயர்வையும், மற்றொரு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் அவ ருக்கு அளிக்க மறுத்துள்ளது என்று  இந்த வழக்கின் மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. பாரம்பரியத்தின் அடிப்படை யில் இந்துக்கள் நான்கு பெரும் குழுக் களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஜாதி அடிப்படையிலான பாகுபாடு இந்தியா வில் தடை செய்யப்பட்டு 65 ஆண்டுகள் கடந்த பிறகும், கல்வியிலும் பணி நிய மனங்களிலும் வாய்ப்புப் பெறுவதற்காக இந்திய ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் இன்னமும் போராடி வருகின்றனர்.


செய்தி: பரேஷ் தேவ்


தொகுப்பு: லெஸ்லி ஆல்டர்


ராய்டர் செய்தி நிறுவனம், 30 ஜூன், 2020


‘நியூயார்க் டைம்ஸ்'


தமிழில்: த.க. பாலகிருட்டிணன்


 


No comments:

Post a Comment