புதுடில்லி,ஜூலை12, நீதிமன்றங்கள் வழக்குகள் தொடர்பாக அழைப்பாணை(சம்மன்), தாக்கீது ஆகியவற்றை மின்னஞ்சலுடன் சேர்த்து சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலமும் அனுப்ப உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே மற்றும் ஆர்.எஸ் ரெட்டி, ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் தற்போது ஊரடங்கு காரணமாக நேரடியாக சென்று தாக்கீதுகள், அழைப்பாணை(சம்மன்)கள் வழங்குவதில் சிரமம் இருப்பதால் இந்த புதிய நடைமுறை தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித் தனர். மேலும் வாட்ஸ்அப் தகவலில் இரண்டு நீல வண்ண டிக் தெரிந்தால், சம்பந்தப்பட்ட நபர் சம்மனை பெற்றுக்கொண்டதாக கருதப்படும், என தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார். ஆனால் வழக்குரைஞர் துஷார் மேத்தா கூறுகையில், வாட்ஸ் அப்பில் நீல வண்ண டிக் தெரியாத வகையில் சுலபமாக செட்டிங்கில் மாற்றம் செய்ய முடியும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர் தாக்கீதைப் பெற்றுக்கொள்ளவில்லை என தவறுதலாக காட்டமுடியும் என்றார். இதையடுத்து வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பும் போது கூடவே மின்னஞ்சல் மூலமும் தாக்கீது அனுப்பப்படும் என தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அனுமதி அளித்துள்ள நிறுவனம் பதிவு பெற்றதா?
அரசுக்கு தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கேள்வி
சென்னை,ஜூலை 12, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அனுமதி அளித்துள்ள நிறுவனம் பதிவு பெற்ற நிறுவனமா? இல்லையா? என்று அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நிறுவனத்தின் உண்மை தன்மை குறித்து முதல்வர் அலுவலகத்தில் அச்சங்கத் தின் செயலாளர் கார்த்திக் அளித்துள்ள புகார்: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க இபாக்ஸ் என்ற நிறுவனம் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித் துள்ளார். இந்த நிறுவனம் பதிவு செய்யப்படாத நிறுவனம். இதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக இபாக்ஸ் காலேஜ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் கல்லூரிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கல்விப்பணிகளில் தலையிட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 11 ஆயிரம் பள்ளிகள் தான் இருக்கின்றன. இவற்றில் 5 ஆயிரம் பள்ளிகளில் தான் பிளஸ் 2 மாணவர்கள் படிக் கின்றனர். அதிலும் 7 ஆயிரம் பேர் தான் நீட் பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையில், பதிவு பெறாத நிறுவனத்தை ஏன் ஒப்பந்தம் செய் தனர் என்பது குறித்து முதல்வர் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தது.
No comments:
Post a Comment