செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 7, 2020

செய்தித் துளிகள்....

* பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கிழக்கு லடாக் எல்லையிலிருந்து 2 கி.மீ. தூரம் சீன இராணுவம் பின்வாங்கியது.


* 98.7 விழுக்காடு கரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். அச்சப்படத் தேவையில்லை என்கிறார் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன்.


* மூன்றாண்டுகளாக இருந்த எம்.சி.ஏ. படிப்பை இரண்டாண்டுகளாகக் குறைத்தது அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் (ஏ.அய்.சி.டி.இ.).


* 11, 12  வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட முறை ரத்து - பழைய பாடத் திட்டமே தொடரும் - அரசு அறிவிப்பு!


* அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ முறைக்கு ஏற்பாடு.


* சாத்தான்குளம் சாவு: உடல் தகுதிச் சான்று அளித்த டாக்டருக்குத் தாக்கீது!


* குவைத்தில் இயற்றப்பட்டுள்ள குடியேறிகள் ஒதுக்கீடு மசோதா எதிரொலியாக 8 லட்சம் இந்தியர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம்!


* அகவிலைப்படியை நிறுத்தியதன்மூலம் இராணுவ வீரர்களின் மன உறுதியைச் சீர்குலைத்தது மோடி அரசுதான் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு.


* இணையவழி வகுப்புகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் - வரும் 15 ஆம் தேதிக்குள் வெளியிட - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.


* தற்போதைய சூழலில் கோயம்பேடு சந்தையைத் திறக்கும் திட்டம் ஏதுமில்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.


No comments:

Post a Comment