"ஜீவாத்மா  - பரமாத்மா என்பதெல்லாம் மழுப்பல்...!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

"ஜீவாத்மா  - பரமாத்மா என்பதெல்லாம் மழுப்பல்...!"


நமக்குள்ள இருப்பது போலி ஆசாரம். சிலதை புனிதம் இல்லைன்னு தடை பண்ணி வச்சிருக்கோம். ஆன்மிகம் என்பதை நம்மைப் போல தப்பாகப் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை.


'நேத்து மாலை முழுவதும் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நீ ஏன் வரல்லே? என் தாபம் தாங்கல்லே!' இப்படி ஒரு பாட்டு தெலுங்குல இருக்கு. அர்த்தம் தெரிஞ்சா தடை போட்டுடுவாங்க!


க்ஷேத்திரக்ஞர் பாட்டு ஒண்ணு இருக்கு, 'கிருஷ்ணா! இப்ப வந்திருக்கிறே... போ... போயிடு. அப்புறம் வா. என் புருஷன் வர்ற நேரமிது!' என்று. யாராவது அர்த்தம் தெரிஞ்சு ஆடறாங்களா?


 அஷ்டபதி ஒண்ணு இருக்கு. தலைவி சொல்றா... "தாபம் அதிகமாயிட்டது. அவனைப் போய் இழுத்துக் கொண்டு வாடி என்கிறாள். தோழி போயிட்டு லேட்டா வரா. 'ஏன் தலை எல்லாம் கலைஞ்சிருக்கு?'ன்னு தலைவி தோழிக்கிட்ட கேட்கிறாள். காத்துல கலைஞ்சு போயிட்டுது'ன்னு பதில் சொல்றா.


ஜீவாத்மா பரமாத்மாவை அடைய தாபத்துல துடிக்கிறது என்பதெல்லாம் மழுப்பலாகத்தான் தோன்றது.


சில சமயங்களில் மாலை நேரக் கச்சேரியில் மரியாதை பண்ணணும் என்பதற்காகவே தொண்டை போனவர்களை எல்லாம் போட்டு விடுகின்றனர். அவர்களை விடவும் முடியாது. இந்த மாதிரி உள்ளவர்களை காலை நேரக் கச்சேரியில் தள்ளி விடலாம். பல்செட் வைத்துக் கொண்டு பாடுகிறவர்களுக்கு எப்படிக் கூட்டம் வரும்?


- இசை விமர்சகர் சுப்புடு


'தினமலர்' (16.12.2003) நாளிதழில்


சொல்லுகின்றவர் நாமல்ல சுப்புடுதான்-அவாள்தான்


No comments:

Post a Comment