அதிகாரத்தோடு இருப்பவர்கள் பொறுப் போடும் இருக்க வேண்டும். மனிதர்கள் சக மனிதர்களை கண்ணியத்தோடு நடத்த வேண்டும். ஆனால் உலகத்தைச் சுற்றிலும் பார்க்கிறபோது, உடல்நிறம் அல்லது சாதி வேறுபாட்டின் அடிப்படையில் பாகுபாடுகளைக் காண்கிறபோது கவலை ஏற்படுகிறது.
2020ம் ஆண்டு இதுவரையில் மிகக் கடுமையான காலகட்டமாகவே இருந்துவந்திருக்கிறது. இந்த ஆண்டு ஒரு தடைக்கல்லுக்குப் பிறகு, இன்னொரு தடைக்கல், கெடுவாய்ப்பான மரணங்களையும், உலகம் முழுக்க கிருமி சூழ்வதையும் பார்க்கிறோம். அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவத்தையும் அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பையும் பார்க்கிறோம், நமது சொந்த எல்லைகளைப் பார்க்கிறோம், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்தக் குடும்பத்திற்கு உணவளிக்கத் தேவையான தினசரிக்கூலியைப் பெறமுடியாதவர்களாக இருக்கிறார்கள், ஆரோக்கிய நிலைமையைப் பார்க்கிறோம், வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கிறோம். இது ஒருவகையில் உலகத்தின் பலவீனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.
"12 வயதிலிருந்து உலகம் முழுவதும் சுற்றி விளையாடி வருகிறேன். நானும் இதே இனவெறியை எதிர்கொண்டிருக்கிறேன். ஏதோவொரு ஆளுமையும் இருந்ததால், நேரடியாக என்னை இழிவுபடுத்த மாட்டார்கள், ஆனால் நுட்பமாக நடக்கும்.
அருமையான என் பெற்றோர், இனவாதப் பிரச்சினை பற்றி எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய நிலைமைகளை எப்படிக் கையாள்வது என்று அந்தத் தடகள வீரர்கள் கற்றுக்கொடுத்தது எனக்கு எப்படியெல்லாம் பயன்பட்டது என்பதை உணர்ந்து பார்க்கிறேன். இன்று டென்னிஸ் வீரராக விரும்பும் எனது 14 வயது மகளுக்கு, நான் கற்றுக்கொண்ட திறமைகளைக் கற்றுக் கொடுக்கிறேன்".
‘இந்தியா டுடே’ பத்திரிகை நடத்திய “இந்தியா டுடே இன்ஸ்பிரேஸன்” நிகழ்ச்சியில், இவ்வாறு பேசியவர் இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம். ‘லவ் ஆல்’ என்று சொல்லி இந்த விளையாட்டைத் தொடங்குவார்கள். லவ் யூ லியாண்டர் பயஸ்! இனம், மதம், சாதி, பணம், அதிகாரம் என்று சக மனிதர்கள் பாகுபடுத்தப்பட்டு, மிதிக்கப்படுவதற்கு எதிராக, உங்கள் மட்டைகளை வீச வருக அனைத்துத்துறை நட்சத்திரங்களே!
- தீக்கதிர் அ.குமரேசன், முகநூலில்...
No comments:
Post a Comment