அமெரிக்காவிலும் குடியேறிய பார்ப்பனீயம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 6, 2020

அமெரிக்காவிலும் குடியேறிய பார்ப்பனீயம்!

பார்ப்பனர்கள் எங்கு சென்றாலும் தங்களின் இனவுணர் வைக் கைவிட மாட்டார்கள். அதிலும் அவர்கள் ஏதாவது ஒரு பதவியில், அதிகாரத்தில் இருந்தால் தனக்குக் கீழே பணியாற்றும் பார்ப்பனர் அல்லாதாரை தலையெடுக்கச் செய்யாமல் பார்த்துக் கொள்வதுடன், அவர்களுக்கு மன உளைச்சல் தரும் வகையில் ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள் - மரியாதைக் குறைவாகவும் நடத்துவார்கள்.


பார்ப்பனர்கள்மீது பார்ப்பனர் அல்லாதாருக்கு ஏற்பட்டு வரும் வெறுப்பு உணர்வுக்கு அவர்களின் அணுகுமுறைதான் முக்கிய காரணம்.


ஏதோ இந்தியாவுக்குத்தான் இந்த நிலை என்றால் வெளி நாடுகளுக்குப் பிழைக்கச் சென்ற இடங்களிலும் தங்களின் பூணூல் விஷமத்தனத்தைக் காட்டாமல் இருப்பதில்லை.


எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் ஜாதிவெறியால் ஏற்பட்ட  ஒருநிகழ்வு


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  ஊழியருக்கு எதிராக  ஜாதி ரீதியான பாகுபாடுகாட்டி துன்புறுத்தப்படுவதற்கு   சிஸ்கோ நிறுவனம் அனுமதித்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் சிஸ்கோ நிறுவனம்மீது கலிபோர்னியா மாகாண அரசு வழக்கு தொடுத்துள்ளது


பாதிக்கப்பட்ட  ஊழியரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை. அவர் 2015 முதல் முதன்மை பொறியாளராக வேலை செய்து வந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. ஜாதிப் பாகுபாடு காட்டிய அந்த இரு மேலாளர்களின் பெயர்கள் இம்மனுவில் இணைக்கப்பட்டுள்ளன; ஒருவர் சுந்தர் அய்யர், மற்றொருவர் ரமணா கொம்பெல்லா .


 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர்களில் 67 விழுக்காட்டினர் ஜாதியப் பாகுபாட்டோடு நடத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஜாதி பாகுபாடு பிரச்சினைகள் குறித்து இத்தனை ஆண்டுகளாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததுதான் வேதனை!


இந்நிலையில் அமெரிக்காவில் முதல்முறையாக ஜாதி ரீதியான பாகுபாட்டை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டி ருப்பது வரவேற்கத்தகுந்தது. புகார் அளித்த ஊழியரும், அவரது மேலாளர்களும் சேன் ஜோஸில் உள்ள சிஸ்கோ தலைமையகத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். சிஸ்கோ நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்களின் எண் ணிக்கை மிக மிக அதிகம்.


உயர்ஜாதியைச் சேர்ந்தவர்களின் குழுவில் தாழ்த்தப்பட் டவர் ஒருவரும் இடம் பெற்றிருந்ததார் என்பதற்காக அவரை இழிவாக நடத்தினர். அவருக்குக் குறைந்த ஊதியத்தைக் கொடுக்கப் பரிந்துரை செய்தனர்.  இதனால் பல தகுதி திறமைகள் இருந்தும் குறைவான வாய்ப்புகள், பிற தரமற்ற விதிமுறைகள் அவர் மீது திணிக்கப்பட்டன.


இது குறித்து கலிபோர்னிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர் என்று கூறப்படும் ஊழியர் தன்மீது சுமத்தப்படும் ஜாதிப் பாகுபாட்டை ஏற்றுக்கொள்வார் என்று  எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


இவ்விவகாரத்தில் சிஸ்கோ நிறுவனத்தின் மீதும், சம்பந்தப்பட்ட மேலாளர்கள்மீதும் அமெரிக்க சிவில் உரிமைச் சட்டம்-1964இன் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஜாதிப் பாகுபாடு சட்டவிரோதமானது அல்ல என்ற போக்கில் சிஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றும் பார்ப்பன அதிகாரிகள், தாழ்த்தப்பட்ட ஊழியருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.


மேலும், சிஸ்கோ நிறுவனம், தாழ்த்தப்பட்டசமூகத்தைச் சேர்ந்த அந்த ஊழியரை தனிமைப்படுத்தி, நல்ல வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வு மறுத்ததை அனுமதித்தது என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. 


இனம், நிறம், மதம், பாலினம், பிறந்த தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிமனையில் பாகுபாடு காட்டுவதை தடுப்பதற்கான சட்டப் பிரிவு VII இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது கலிபோர்னியா மாநில அரசு.


பார்ப்பனர்களைப்பற்றி திராவிடர் கழகம் விமர்சித்தால், உடனே தயாராக ஒரு பதிவைக் கைவசம் வைத்திருப்பார்கள். தி.க.காரர்களுக்கு இதுதான் வேலை. ராமசாமிநாயக்கருடன் அது முடிந்துவிடும் என்று நினைத்தால் இந்த வீரமணி அதில் தீவிரமாகவே இருக்கிறார் என்று தங்கள் கையில் ஊடகம் வசமாக சிக்கிக் கொண்டு இருப்பதால் அக்கப்போர்த்தனமாக எழுதுவார்கள்.


இந்தியாவில் இருக்கும் பார்ப்பனீயம் அமெரிக்கா வரை குடியேறியிருக்கிறதே - இதற்கு என்ன பதில்? தாழ்த்தப் பட்டவர்களை மோசமாக நடத்தியவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதே - இதற்கு என்ன பதில்?


சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான் என்ற டாக்டர் டி.எம். நாயரின் அரிய பொன்மொழியை நினைவில் இறுத்துவீர்!


No comments:

Post a Comment