ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 13, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • நேற்று (12.7.2020) ஒரே நாளில் தமிழ் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000-த்தையும் கடந்தது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் அய்ந்து மாதங்கள் நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:



  • பீகாரில் ராம் விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜன்சக்திக் கட்சி தங்கள் கூட்டணியில் இல்லையென்றாலும், பா.ஜ.க. - நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என பா.ஜ.க. தலைவர் சஞ்சய் பஸ்வான் கூறியுள்ளார்.

  • இந்திய குற்றவியல் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த மோடி அரசின் உள்துறை அமைத்துள்ள குழுவில், பெண்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட பிரிவினர் சார்ந்த எவரும் இல்லை என கட்டுரையாளர் நந்திதா ராவ் எழுதியுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • வடநாடும் தென்னாடும் முற்றிலும் வேறானவை; ஒரு போதும் இணைந்து செயல்பட முடியாது என மூத்த பத்திரிக்கை யாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.

  • மோடி ஆட்சியில் இந்திய எல்லையில் சீனா அபகரித்த நிலம் எங்கே என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


தி இந்து:



  • பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் கரோனாவைக் காரணம் காட்டி சி.பி.எஸ்.சி. பாடங்களை, குறிப்பாக சமூக இயல் பாடங்களில் குறைப்பது, சிறந்த குடிமகன்களை உருவாக்கும் முயற்சிக்குத் தடையை ஏற்படுத்தும் என மேனாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.

  • நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, இன்னொரு மன்மோகன் சிங் தேவை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.


- குடந்தை கருணா


13.7.2020


No comments:

Post a Comment