குழந்தை. தமிழரசனுக்கு நமது வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

குழந்தை. தமிழரசனுக்கு நமது வீரவணக்கம்!


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களில் ஒருவரும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த வருமான அருமைத் தோழர் மானமிகு குழந்தை. தமிழரசன் (வயது 64) அவர்கள் நேற்று (9.7.2020) திருச்சி மருத்துவமனை ஒன்றில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், மிகவும் துன்பமும், துயரமும் அடைகிறோம்.


தோழர் குழந்தை. தமிழரசன் அவர்கள் நமது  குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவர். மறைந்த கழகப் பொருளாளர் சகோதரர் கோ.சாமிதுரையின் மருமகன்.


திராவிடர் இயக்கக்  கொள்கைகளில் தீவிர பற்றுகொண்டு உழைத்தவர். நம்மிடம் எப்போதும் மாறாத அன்புடன் பழகும் பண்பாளர்.


அவர் அனைவரிடமும் அன்போடும், பண்போடும் பழகுபவர். அவரது மறைவு என்பது நமது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, திராவிட இயக்கத்திற்கும், பொதுவானவர் களுக்கும் ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும்.


அவரது மறைவால் வாடும் அவரது வாழ்விணையர் திருமதி விஜி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


நமது வீரவணக்கம்.


 


- கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


10.7.2020


No comments:

Post a Comment