நீரிழிவு இல்லாமல் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்தாலும் கரோனா கொல்லும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 13, 2020

நீரிழிவு இல்லாமல் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்தாலும் கரோனா கொல்லும்!


லண்டன், ஜூலை 13 கரோனா வைரஸ் நோயாளி ஒருவருக்கு நீரிழிவு நோய் இல்லாமல் ரத்த சர்க் கரை அளவு சில நாட்கள் உயர்ந்து காணப்பட்டாலும் அவரது உடல் உள்ளுறுப்புகள் மோசமாக பாதிக் கப்படும், சில சந்தர்ப்பங்களில் உயிரிழக்கும் ஆபத்தும் உண்டு என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


கரோனா வைரஸ் உருவாகி 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலை யிலும் வாரம் ஒரு ஆய்வு, தினம் ஒரு தகவல் என வெளியாகின்றன. அவை கரோனா வைரஸ் எவ்வளவு சவாலானது என்பதை காட்டுகின் றன. சமீபத்தில் கரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை உடையது என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் டையாபெட் டால ஜியா என்ற ஆய்விதழில் புதிய ஆய்வுக் கட்டுரை வெளியாகி யுள்ளது. அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிப்பதாவது: நீரிழிவு நோய் இல்லாமல், அதிக ரத்த சர்க்கரை அளவு கொண்ட கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அதிக ஆபத்து மற்றும் தொற்று நோயிலிருந்து கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உண்டு. எனவே நீரிழிவு நோய் இல் லாதவர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம். பெரும் பாலான கரோனா நோயாளிகள் குளுக் கோஸ் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள்.


எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கும்போது காலை உண வுக்கு முந்தைய ரத்த சர்க்கரை அளவை கண்டறிந்து, அதிகமாக இருந்தால் கட்டுப்படுத்த வேண் டும். நிமோனியாவின் தீவிரத்தை குழப்ப நிலை, சுவாச விகிதம், ரத்த அழுத்தம், வயது ஆகியவை தீர் மானிக்கின்றன. ஆய்வுக்குட்ப்படுத் திய 208 நோயாளிகளில் இதில் ஏதேனும் இரண்டு பிரச்னைகள் இருந்தன. ஆனால் சர்க்கரை நோய் இல்லை.  இவர்களில் சிலருக்கு ரத்த சர்க்கரை அளவு உயர்வாக இருந் தது. அது சிகிச்சையில் சிக்கல்கள் மற்றும் இறப்புகளை உண்டாக் கியதை முதல் முறையாக கண்டறிந்தோம். இருப்பினும் இவை முழுமையான ஆய்வு கிடை யாது. கூடுதல் தரவுகள் தேவை. கரோனா நோயா ளிகளிடையே ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொதுவான ஒன்றாக ரத்த அழுத் தம் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


No comments:

Post a Comment