'விடுதலை' செய்திப் பிரிவில் பிழைதிருத்து நராக பணியாற்றிய சி.பால் (வயது 96) சென்னை கொடுங்கை யூரில் 10.7.2020 அன்று முதுமை காரணமாய் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 'விடுதலை' நாளேட்டில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நிலையில் மாநில அரசு வழங்கிடும் பத்திரிகையாளர் ஓய்வூதியத்தைப் பெற்று வந்தார். மறைந்த சி.பால் அவர்களின் துணைவியாரும், மகனும் ஏற்கெனவே மறைந்துவிட்ட நிலையில் அவரது மகள்-மருமகளு டன் இருந்து வந்தார். 'விடுதலை'நாளேட்டின் குழுமம் மறைந்த சி.பால் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது. தொடர்புக்கு: குருசாமி (மருமகன்): 8867879867.
- ஆசிரியர், 'விடுதலை' நாளிதழ்
- - - - -
கும்மிடிப்பூண்டி கழக மாவட்ட, புழல் ஒன்றிய செயலாளர் வடகரை உதயகுமார் அவர்களின் தாயாரும், முதுபெரும் பெரியார் தொண்டர் வடகரை முனுசாமி அவர்களின் வாழ்விணை யருமான கிருஷ்ணவேணி (85) உடல் நல குறைவால் இன்று (11.7.2020) காலை மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று பிற் பகலில் அடக்கம் நடை பெற்றது. கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன் மற்றும் கழகத் தோழர்கள் உதயக்குமார் குடும்பத்தி னருக்கு இரங்கலைத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment