தஞ்சை மாவட்டக் கழக காப்பாளர் வெ.ஜெயராமன் அவர்களின் 80ஆவது பிறந்தநாள் கழகத் தோழர்கள் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 14, 2020

தஞ்சை மாவட்டக் கழக காப்பாளர் வெ.ஜெயராமன் அவர்களின் 80ஆவது பிறந்தநாள் கழகத் தோழர்கள் வாழ்த்து!


தஞ்சை மாவட்டக் கழகக் காப்பாளர் வெ.ஜெயராமன் அவர்களின் 80ஆவது பிறந்தநாளில் (13.7.2020) கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் தொலைப்பேசி மூலம் வாழ்த்தினைத் தெரிவித்தார்கள். தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன் (பொறுப்பு) மரு.மருதுதுரை அவர்கள் தொலைப்பேசி வாயிலாக தனது வாழ்த்தினைத் தெரிவித்தார். தஞ்சை மண்டலத்தின் சார்பில் மண்டல தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மண்டல மகளிர் அணித் தலைவர் அ.கலைச்செல்வி, கும்பகோணம் கழக மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை துரைராசு, அமைப்பாளர் அழகுவேல், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன், செயலாளர் துரை.ஸ்டாலின், திருவையாறு பேரூர் தலைவர் கோ.கவுதமன், செயலாளர் கவுதமன், அய்யம்பேட்டை நகரத் தலைவர் வெ.இராவணன்.ந.அருள்மொழிவர்மன் ஆகியோர்  பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்.





No comments:

Post a Comment