தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் காப்பாளரும், முது பெரும் பெரியார் பெருந்தொண் டருமான மானமிகு நெய்வேலி வெ. ஜெயராமன் அவர்கள் இன்று (13.7.2020) 80ஆம் அகவை காணுகிறார்.
நெய்வேலியில் பணியாற்றிய காலந்தொட்டே இயக்கத்தின் கொள்கையில் ஈர்ப்புடன் இயக்கப் பணி செய்வதை வாடிக்கையாகக் கொண்ட தோழர் அவர்.
பலரையும் இயக்கத்திற்கு அழைத்து வந்து பணியாற்றச் செய்யும் பண்பாளர் - கொள்கை பரப்பாளர்.
சீரிய உடல்நலத்துடன் அவரும், அவர்தம் குடும்பத் தினரும் வாழ்ந்து, இயக்கத் தொண்டில் மேலும் ஈடுபட வேண்டுமென வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
13.7.2020
குறிப்பு: இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார் கழகத் தலைவர்.
No comments:
Post a Comment