அய்யா, வணக்கம்!
2.7.2020 அன்று பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் படிப்பு வட்டம் சார்பில் 100ஆவது இணைய வழி கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையை கேட்டேன், நெகிழ்ந்து போனேன்.
காணொலியில் "இந்தியாவுக்கு வழிகாட்டும் பெரியாரின் சமூக நீதிப் பார்வை?" என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கருத்தரங்க உரையைக் கேட்டேன் என்னிடமிருந்த மனச் சோர்வு நீங்கி எழுச்சி பெற்றேன். தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பல்வேறு சமூக நீதி மாநாடுகள், போராட்டத்தின் விளைவாக இந்திய அளவில் இடஒதுக்கீடு கிடைத்தது என்று உரையாற்றினீர்கள்.
அரைமணி நேரத்தில் இந்தியாவில் சமூக நீதி போராட் டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களின் உழைப்பு பற்றியும், அவர்களின் பெயரை ஒரு நிமிடத்தில் உச்சரிக்கும் - இந்தியாவில் எந்த தலைவருக்கு இல்லாத சிறப்பு எனது தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பது.
மத்திய அமைச்சர் பஸ்வான், பா.ஜ.க.வுடன் உள்ளார் என்ற வருத்தம் இருந்தது. ஆசிரியர் அவர்கள் சமூக நீதியில் பஸ்வான் எப்போதும் உறுதியாக உள்ளார்கள் என்றும், இடது சாரிகள், காங்கிரஸ் போன்ற கட்சிகள் சமூக நீதியில் ஆர்வத் தோடு உள்ளனர் என்றும், வட மாநில தலைவர்கள் சமூக நீதி யில் உறுதியாக உள்ளார்கள் என்றும், மேனாள் பிரதமர் வி.பி.சிங் 27 சதவீதம் சட்ட வடிவம் கொடுத்தார் எனவும் உரையாற்றியது மகிழ்ச்சி அளித்தது.
இந்த நிகழ்வின் மூலமாக சமூக நீதியைத் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்க ளுக்கு மிகவும் நன்றி.
உண்மையுள்ள
- மா.பவுன்ராசா
தலைவர், மதுரை மண்டல திராவிடர் கழகம்
No comments:
Post a Comment