பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் துணிஞ்சபாடி கழக பொதுக் குழு உறுப்பினர் ஆறுமுகம்-மரகதம் பாள் இணையரின் மகன் மருத்துவர் சமத்துவச் செல்வன், நடுவணரசு துணை முதன்மை அலுவலர் சுகா தாரம், சமூக நலம் நெல்லூர் கரூர் மாவட்டம் குளித்தலை நகரம் நினை வில் வாழும் ஆசிரியர் து.இளந்திரை யன்-மீனா கலைச்செல்வி பட்டதாரி ஆசிரியர் இணையரின் மகள் மருத்துவர் அருண்மொழி இவர்களின் இணையேற்பு நிகழ்வு துணிஞ்சபாடி மணமகன் இல்லத்தில் பாவலர் முத்தரசன் தலைமை யில் சுமார் நாற்பது நெருங்கிய உறவினர் முன்னிலையில் 24.6.2020 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. ஏறத்தாழ 100 நபர்களுக்கு உணவு தயாரித்து 40 உணவுகள் உண்டது போக மீதி உணவை உள்ளூர் ஏழை எளிய மக்களுக்கு பொட்டலங்களாக வழங்கப் பட்டன. மணமக்கள் இணையேற்பு மகிழ்வாக ரூ.1000 விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கினர். வாழ்த்துகள்.
Tuesday, July 14, 2020
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment