ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 7, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியில் இருந்து இன்றைய நாள் வரை, இந்தியாவில் 106 மருத்துவர்கள் கரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளார்கள்.

  • கரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இந்தியாவில் இருந்து ஒருவர் பெயர் கூட இதில் இல்லை என டில்லியில் வசிக்கும் ஆராய்ச்சி யாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

  • கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது; பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து, வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது; பலம் கொண்ட எதிரி நமது அண்டை நாடாக இருக்கும் இந்தச் சூழலில், மோடி அரசு மக்களைப் பிளவுபடுத்தும் செயலில் ஈடுபடுகிறது. ஆனால், நாம் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என எழுத்தாளர் ஆகார் படேல் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • தனியார் துறையில் 75% வேலை வாய்ப்பை அம்மாநிலத்தில் வசிப்பவர்களுக்கே அளிக்க வேண்டும் என அரியானா மாநில அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  • நாடு சிக்கலான சூழலில் இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் அரசைக் கேள்வி கேட்க உரிமை உண்டு. அதற்கு அரசு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள் என காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

  • கரோனா தொற்றுக்குப் பின்னர், வங்கிகளில் தனியார் நிறுவ னங்களில் முதல் 500 நிறுவனங்களின் வாராக்கடன் ரூ.1,67,000 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஏற்கனவே உள்ள வாராக்கடனான ரூ.2,54,000 கோடியையும் சேர்த்தால், ரூ.4,21,000 கோடியாக ஆகும் என இந்தியா ரேட்டிங்க்ஸ் மற்றும் ரிசர்ச் எனும் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய பாடத் திட்டத்தில் மூன்று முதன்மைப் பாடத்தொகுப்பினையோ அல்லது நான்கு முதன்மைப் பாடத்தொகுப்பினையோ தேர்வு செய்து கொள் ளலாம் என சென்ற வாரம் தமிழக அரசு பிறப்பித்த ஆணைக்கு, பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையடுத்து, பழைய திட்டமே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி:



  • ரயில்வே தனியார்மயமாக்கலை எதிர்த்து, தெற்கு மத்திய ரயில்வே மஸ்தூர் சங்கம், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்திட முடிவு செய்துள்ளது.


எகனாமிக் டைம்ஸ்:



  • பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினருக்கான வரு மான வரம்பை (கிரிமிலேயர்) தற்போதுள்ள ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் சம்பள வருமானமும் சேர்க்கப்படும் என முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.


- குடந்தை கருணா,


7.7.2020


No comments:

Post a Comment