பெரியார் கேட்கும் கேள்வி! (52) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 22, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (52)


பார்ப்பனர்கள் அதிகாரத்திலும், உத்தியோகத்திலும் தாராளமாய் அமர்ந்து இருந்த காரணத்தாலும், சமூகத் துறை யிலும், அவர்கள் மேல் நிலை பெற்றிருந்ததாலும், வாழ்க்கை யிலும் அவர்களே நமக்கு வழிகாட்டிகளாக அமர்ந்திருந்த தனாலும் அவர்களுடைய (பார்ப்பனர்களுடைய) எதிர்ப்பும், தொல்லையும் திடீரென்று பதவிக்கு வந்த நம்மால் சுலபத்தில் சமாளிக்க முடியாததாய் இருந்தது என்றால், இதில் யாதொன்றும் ஆச்சரியம் இருக்க இடமில்லையல்லவா?


அதோடு நமது மக்களும், அதாவது பார்ப்பனர் ஒழிந்த மற்ற மக்களும் பார்ப்பனியத்தின் பயனாய் போதிய கல்வியும், உலக ஞானமும் இல்லாமல் பெரும்பாலோர் சமூகத் துறையில் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்தது போலவே, வாழ்க் கைத் துறையிலும் அவர்களுக்கு அடிமையாய் இருந்தாலும், பார்ப்பனர்களை எதிர்ப்பது என்பதை ஒரு மதக் கட்டளையை மீறுவதுபோல் மதிப்பவர்களாய் இருந்தாலும் சிக்கலான அரசியலில் இருந்து கொண்டிருக்கிற நமது கஷ்டம் இன்னும் அதிகமாய் இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?


- தந்தை பெரியார், 'குடிஅரசு', 27.9.1936


- ‘மணியோசை’


No comments:

Post a Comment