திருப்பதி கோவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மூடப்படுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 22, 2020

திருப்பதி கோவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மூடப்படுகிறது

திருப்பதி  கோவில் அர்ச்சகர்கள் உள்பட 50 பேரில் 15-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 25 பேரின் பரிசோதனை முடிவுகள் வர உள்ளன. தொற்று தீவிரமானதை யடுத்து கோவில் பணியாளர்கள் மற்றும் தொழி லாளர்கள் பொது தரிசனத்தைத் தற்காலிகமாக நிறுத்தவேண்டும் என வலியுறுத்தினர். இதை யடுத்து திருப்பதி கோவில் பகுதி கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு ஆக. 5 ஆம் தேதி வரை 14 நாள்கள் கோயிலை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப் பட்டதால் அத்தியாவசியப் பொருட்கள் தவிர வாகன போக்குவரத்து உள்ளிட்ட மற்றவற் றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment