நெய்வேலி என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

நெய்வேலி என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கடலூர், ஜூலை 10 கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  1ஆம் தேதி பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளதாக தகவல் வெளியானது. படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்த சில நாட்களில் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள், 9 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 2 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவர். இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து மற்றும் தொழிலாளர்கள் மரணங்கள் தொடர்பான விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


-


அக்டோபர் 15க்குள் பொறியியல் கல்வியில்


மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு


அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு


சென்னை,ஜூலை 10, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான கல்வியாண்டு அட்டவணையை சமீபத்தில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டது.  அதில் கூறப்பட்டிருப்பதாவது: பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வை வருகிற அக்டோபர் 5ஆம்தேதிக்குள்ளும், 2ஆம் கட்ட கலந்தாய்வை 15ஆம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க வேண்டும். அதேபோல், மாணவர் சேர்க்கை மற்றும் காலி இடங்களை நிரப்புவது போன்ற பணிகள் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டும். ஏற்கெனவே படித்துக்கொண்டிருக்கும் பொறியியல் மாணவர் களுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதியில் இருந்தும், புதிதாக சேரும் மாணவர்களுக்கு அக்டோபர் 15ஆம் தேதியில் இருந்தும் வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-


No comments:

Post a Comment