கீதை ஆய்வுச் சொற்பொழிவு - 5 | காணொலியில் கழகத் தலைவர் நிறைவுரை, கீதையைப் பரப்பும் நோக்கமென்ன?
* கலி. பூங்குன்றன்
பகவத் கீதை ஆய்வுச் சொற்பொழிவு (5) நிறைவு ரையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் நேற்று மாலை 6 மணிக்குக் காணொலி மூலம் நிகழ்த்தினார்.
கீதையைப்பற்றி வெளிவந்த பல்வேறு ஆங்கில நூல்களிலிருந்தும் எடுத்துக்காட்டுகளைக் கூறினார்.
கீதை என்ற நூலை உலகம் எங்கும் பார்ப்பனர்கள் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதன்மூலம் இந்து மதத்தைப் பரப்புகிறார்கள். இந்து மதத்தைப் பரப்புவது என்றால் அதன் பொருள் பார்ப்பனீய சித்தாந்தத்தை ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் நோக்கமே!
‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!’ கீதையில் பகவான் கிருஷ்ணன் ஆகா எவ்வளவு சிறப்பாகச் சொல்லுகிறார் என்று மெல்லிய குரலில் சன்னமாக உச்சரிப்பார்கள்.
‘நிஷ்காமியகர்மம்‘ என்பார்கள் இவை எல்லாம் மக்களை மயக்கும் சொற்றொடர்களே!
அவர்கள் சொல்லும் கடமை என்பது என்ன, தர்மம் என்பது என்ன என்பதுதான் முக்கியம். அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் நான் தோன்றுவேன் என்கிறான் கிருஷ்ணன் (இப்பொழுது நடப்பது எல்லாம் தர்மம்தானா! அதர்மம் தலைதூக்கவேயில்லையா? பகவன் கிருஷ்ணன் ஏன் இப்பொழுது தோன்றவில்லையாம்?)
ஏதோ ஒரு நூலைப் பரப்புகிறார்கள் என்கிற அளவில் அதனை நாம் கருதிவிட முடியாது - அதன் மூலம் குலதர்மத்தை, ஜாதி தர்மத்தை நியாயப்படுத் துகிறார்கள், புதுப்பிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது.
எந்த நோக்கத்துக்காக அவர்கள் கீதையைப் பரப்புகிறார்களோ, அதே நோக்கத்துக்காக, அவர்கள் பரப்பும் ஜாதி தர்மத்தை, வருண தர்மத்தை ஒழிப்பதற்காக நாம் நமது கடமையை ஆற்றுகிறோம்.
கீதைக்கு நாம் மறுப்பு எழுதுவதும், இதுபோல பிரச் சாரம் செய்வதும் அந்த அடிப்படையில்தான். அதே நேரத்தில் நம்முடைய பிரச்சாரத்தில் வசவுக்கு இடம் இல்லை. இழிவுபடுத்தி யாரையும் பேசவும் இல்லை.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இழிவுபடுத்தப்படும் நாம் - பிறப்பின் அடிப்படையில் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர் என்றும், தீண்டத்தகாதவர் என்றும், பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றும் அவமதிக்கப்படுகிற காரணத்தால், நாம் அதனை எதிர்க்கிறோம் என்பதுதானே உண்மை.
உண்மையில் இழிவுபடுத்து கிறவர்கள் அவர்கள் அந்த இழிவைத் துடைத்து எறிய வேண்டும் என்று போராடுவோர், குரல் கொடுப்போர் நாம். ஆனால் எதையும் தலைகீழாகப் புரட்டிப் பேசும்கூட்டம், இதை யும் புரட்டிப் பேசுகிறது.
கீதையில் கூறப்பட்டு இருப் பதை அப்படியே எடுத்துக்கூறி, இந்த காலக்கட்டத்தில் நிலை நாட்ட முடியாதவர்கள் இப்பொ ழுது என்ன சொல்லுகிறார்கள்? கீதை ஒரு விஞ்ஞான நூல், வாழ்வியல் நூல் என்று பரப்புரை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இவர்கள் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை உண்மையிலே வரவேற்கக் கூடியவர்களாக நாங்கள்தான் இருப்போம்!
இதில் என்ன கொடுமை என்றால் கீதையின் பிற் போக்குத்தனத்தை, குலதர்மத்தைக் காக்கும் வேலையில் தான் எல்லா நிலையிலும் உள்ள பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.
கவர்னர்ஜெனரல் என்கிற அளவுக்குப் பெரும் பதவி வகித்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்ன சொல்லுகிறார்?
Òகீதையிலும் உபநிஷத்துக்களிலும், இன்னும் உலகத்தார் மதிக்கும் தரும நூல்களிலும் விவரிக்கப்படும் விஷயங்கள், கணிதம், பௌதிகம், ரசாயனம் முதலிய பௌதிக நூல்களில் விஷயங்கள் எவ்வளவு தெளிவாகச் சொல்லப்படுகின்றனவோ அவ்வளவு தெளிவாகச் சொல்லப்படாததைக் கொண்டு, இவற்றை ஆதார மற்றவை என்று எண்ணி விடக் கூடாது. இந்திரியங் களுக்கு அடங்காத தத்துவங்களை ஆராய்ச்சி செய்து ஞானம் பெறுவதற்கு அறிவும், புத்தியும் மட்டும் போதா. புத்தியும், சுத்தமும், தவமும், தியானமும் அவசியம்.ÕÕ
எவ்வளவு சாமர்த்தியமாக ஆச்சாரியார் (ராஜாஜி) சப்பைக் கட்டுகட்டுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
அன்னத்திலிருந்து உயிர், மேகத்திலிருந்து அன்னம், வேள்வியிலிருந்து மேகம் என்று கிருஷ்ணன் கூறுவ தெல்லாம் கீதை எழுதப்பட்ட காலத்தில் இருந்த அறிவைத்தான் காட்டுகிறது.
கீதையை விஞ்ஞான நூல் என்று சொல்லுவது இப்படித்தானா? யாகத்திற்கு விஞ்ஞான முடிச்சுப் போடுவதன் நோக்கம் என்ன?
கீதையின் கூற்றுப்படி சந்திரன் ஒரு நட்சத்திரம். இது உண்மை என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறதா?
சந்திரன் பூமியின் துணைக் கோள். அது பூமியை சுற்றுகிறது என்பதுதானே புவியியல் விஞ்ஞானம் கூறும் உண்மை (இப்படியெல்லாம் பார்க்கக் கூடாது என்று ராஜாஜி கூறியதற்கான காரணம் இப்பொழுது விளங்குமே!)
அய்ன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளின் கருத்து களையும் எடுத்துக் கூறி, கீதையின் அஞ்ஞான இருளை விளக்கிக் கூறினார் கழகத் தலைவர்.
நம் நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் என்று கூறப்படுபவர்கள் கூட மத விடயங்களில் அஞ்ஞானி களாக இருப்பதையும் நினைவுப் படுத்தினார்.
“முதல் மனிதன் ககாரின் 1962-இல் விண்வெளி - அகண்ட காஸ்மாஸில் சென்றதை விஞ்ஞானியாக இருந்தும், கடவுள் நம்பிக்கை கொண்ட நல்லவர் டாக்டர் சி.வி. ராமன் அவர்கள் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத்தில் மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிக மிகப் பாவம் செய்வதாகும் என்றார்.
அறிஞர் என்று பட்டம் சூட்டப் பட்ட அவரே அவ்வாறு எண்ணங் கொண்டிருந்தார் என்றால், நம் நாட்டின் பாமர மக்களின் நிலையை நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை; கூறாமலே அது விளங்கும்ÕÕ
(“கடவுள் கற்பனை - புரட்சிகர மனித வரலாறு” முன்னுரையில் தோழர் ஏ.எஸ்.கே.(அய்யங்கார்).
இன்றைக்குக்கூட பிரதமராக இருக்கக் கூடியவர் விஞ்ஞானிகள் மாநாட்டில் என்ன பேசினார்? உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை நம் சிவ பெருமானே செய்திருக்கிறான் என்று சொல்லவில்லையா? சானிட் டேஷனுக்குச் சிறந்தது மாட்டு மூத்திரம் என்று கூறு வோரும் இந்த 2020லும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்றார்.
மகாபாரதத்திலேயே இன்டர்நெட் வந்துவிட்டது என்றும், சரக முனிவர், ஆரிய பட்டா போன்றவர்கள் நியூட்டனின் புவி ஈர்ப்பு விசையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டனர் என்று மத்திய கல்வி அமைச்சரே கூறவில்லையா?
குலதர்மத்தையும், வருண தர்மத்தையும் காப்பாற் றவே எழுதப்பட்ட கீதை என்ற ஒரு நூல் கடவுள் கிருஷ்ணனால் உண்டாக்கப்பட்டதென்றும், அதை அப் படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறும் நிலையில், அந்நூலுக்கு விஞ்ஞான முலாம் பூசி மக்களை நம்ப வைக்கும் ஒரு திட்டத்தில், ஒரு தந்திரத்தில்தான் இதுபோன்ற கிதை பிரச்சாரகர்கள் காரிணங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் கழகத் தலைவர்.
மதமும் - கள்ளும்
"கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங் களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள் குடித்த வனைக் கெடுக்கிறது. மதம் மனதில் நினைத்தவனையே கெடுக்கிறது"
- தந்தை பெரியார்
'விடுதலை' 17.12.1937
"கோர்ட்டுக்குள் பிராமணன் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும்"
கூட்டத்தின் முடிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கழகத் தலைவர் அளித்த பதில்களில் சில:
கேள்வி: இதிகாசங்கள், புராணங்கள் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டன?
கழகத் தலைவர் பதில்: ஆதியில் தோற்றுவிக்கப்பட்டவை வேதங்கள் - பிற்காலத்தில் எழுதப்பட்டவைதான் புராணங்கள். வேதங்கள் கி.மு.2000 முதல் கி.மு.300 வரையிலும் உருவாக்கப்பட்டன. புராணங்கள் கி.பி.300 முதல் கி.பி.600 வரை பெரும்பாலும் குப்தர்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை. குப்தர்கள் ஆட்சி பொற்காலம் என்பதன் ரகசியம் இதுதான்.
வேதம் என்றால் வைதிகம்- புராணங்கள் என்றால் புரோகிதம் என்றும் சுருக்கமாகக் கூறினார்.
நீதிமன்றங்களில் சத்தியம்
இதுகுறித்து சுவையான அதே நேரத்தில் அரிதான தகவல்களைத் தந்தார் கழகத் தலைவர்.
"ரிபப்ளிக் ஆஃப் ரிலிஜன்" எனும் நூலிலிருந்து எடுத்துக் கூறினார். தொடக்கத்தில் ருக் வேதத்தின்மீது நீதிமன்றத்தில் சத்தியம் செய்யலாம் என்று முடிவு எடுத்தார்கள். வேதம் என்றால் புனிதமானது - அதன்மீது கை வைத்துச் சொன்னால் அது தீட்டுப்பட்டுவிடும் என்று கூறிக் கைவிட்டனர். அதன் பிறகு கீதைமீது சத்தியம் என்று கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னதாக நீதிமன்றத்திற்குள் பசு மாட்டைக் கொண்டு வந்து நிறுத்தி, அதன் தலையைத் தொட்டுக் கும்பிட்டுச் சொல்லும் முறை இருந்தது. அதைவிட இன்னொரு கொடுமை Ôபிராமணன்Õ ஒருவனைக் கொண்டு வந்து, அவன் காலைத் தொட்டுக் கும்பிடுவது என்றெல்லாம் இருந்திருக்கிறது என்று சொன்னபொழுது பலருக்கும் புதிய தகவல்களாக இருந்தன.
'சர்வம் கிருஷ்ணார்ப்பணம்' எனும் அமைப்பின் பெயரில் ஒருவரின் கேள்வி. கீதைப்பற்றி இழிவுபடுத்தி பேசுகிறீர்களே, குரான், பைபிளைப் பற்றிப் பேசுவீர்களா என்ற கேள்விக்கு கழகத் தலைவர் சொன்ன பதில்.
முதலில் கேள்வியே தவறு நாங்கள் யாரையும் எதையும் இழிவுபடுத்திப் பேசவில்லை. மாறாக, எங்களை இழிவுபடுத்துபவர்களைப் பற்றியும் இழிவுபடுத்துபவைகளைப் பற்றியும்தான் பேசுகிறோம். அப்பொழுதும்கூட, நாங்கள் எதையும் இழிவாகப் பேசவில்லை அப்படி இருந்தால் சொல்லட்டும்!
பைபிளைப் பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்கிறார்கள். இங்கர்சாலும், ரசலும், கிறித்துவ மதத்தைப் பற்றித்தான் அவர்கள் நாட்டில் விமர்சித்தார்கள், ஏன் இந்து மதத்தைப் பற்றிப் பேசவில்லை என்று யாரும் அவர்களைக் கேட்கவில்லை.
பைபிளும், குரானும் எங்களை சூத்திரர்கள் - வேசி மக்கள் என்று இழிவுபடுத்தவில்லையே! எங்களை யார் இழிவுபடுத்துகிறார்களோ அவர்களைப்பற்றிதான், எவை இழிவுபடுத்துகின்றனவோ அவற்றைப் பற்றித்தான் விமர்சிக்கின்றோம். நீங்கள் வேண்டுமானால் குரானைப் பற்றியும், பைபிளைப்பற்றியும் பேச வேண்டியதுதானே என்றார் திராவிடர் கழகத் தலைவர்.
வருண தருமப்படி நடக்க வேண்டும் என்றால் Ôபிராமணர்கள்Õ என்ன செய்ய வேண்டும்?
"பழைய நாளில் பிராமணன்தான் பிச்சை எடுப்பான். மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். Ôபிச்சைக்காரப் பார்ப்பான் தெருÕ என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது. பிராம்மண சந்நியாசிகள் அன்ன பிச்சை வாங்குவார்கள். பிராம்மணர்கள் உஞ்ச விருத்தி செய்வார்கள். மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை வாங்குவதில்லை. Ôஏதாவது வேலை செய்துவிட்டு, அதைக் கூலியாகப் பெற்றுக் கொள்கிறேன்Õ என்பார்கள். இப்போது இவன் செய்கிற காரியம் நல்லதோ, கெட்டதோ அதை அப்படியே மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்!"
- "காஞ்சி சங்கராச்சாரியார் உபந்நியாசங்கள்" முதற்பகுதி
கீதையைப் போற்றும் பார்ப்பனர்கள் குலதர்மப்படியும், சங்கராச்சாரியார் கூறியுள்ளபடியும் இப்படி நடக்கத் தயார்தானா?
No comments:
Post a Comment