ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி


கோபி, ஜூலை 10- தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை: மார்ச் 24ஆம் தேதி நடந்த பிளஸ் 2 தேர்வைச் சில மாணவர்கள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.  விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வு வரும் 27ஆம் தேதி நடத்தப்படும். மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வு மய்யங்கள் அமைக்கப்படும்.


இதற்கான புதிய ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற


இணைய தளத்தில் இருந்தும், பள்ளிகள் மூலமாகவும் வரும் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை அதேநாளில் தனித் தேர்வு மய்யங்களில் பெற் றுக்கொள்ளலாம். தேர்வு மய்யங்களுக்கு மாண வர்கள் செல்ல, போக்குவரத்து வசதி செய்து தரப் படும் என்றார். மேலும், வரும் 13ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதற்குள் பாடப் புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.


இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; தொலைக்காட்சி மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புக்காக 3 தொலைக்காட்சிகள் தயாராக உள்ளன என்றார்.


மேலும், 12ஆ-ம் வகுப்பில் மீதமுள்ள ஒரு தேர்வை எழுதாத மாணவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது. 12ஆ-ம் வகுப்பில் எஞ்சிய தேர்வை எழுதாதவர்களை எப்படி தேர்ச்சியடைய செய்ய முடியும்?


மீதமுள்ள 12ஆ-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, மதிப்பெண் அடிப் படையில் தேர்ச்சி வழங்கப்படும். 12ஆம் வகுப் பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.


மேலும் விண்ணப்பிக்காத 34,812 மாண வர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித் தால் எழுதலாம் என்றார்.


No comments:

Post a Comment