பெரியார் கேட்கும் கேள்வி! (42) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 12, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (42)


பார்ப்பனர்கள் இந்நாட்டுக்குச் செய்ததென்ன? வாய்க் கால்கள் வெட்டினார்களா? சாலைகள் போட்டார்களா? வீடுகள் கட்டினார்களா? இவர்கள் வெட்டிப் புரட்டியதென்ன? இவர்கள் நம் நாட்டிற்குத் தந்ததெல்லாம் தர்ப்பைப்புல்லும், கோவில் மணியும் தவிர வேறென்ன? இத்தகைய யோக்கி யர்கள் இவர்களின் சூழ்ச்சிகளை விளக்கித் தங்கள் நாட்டு மக்களுக்காகப் பாடுபடுவோரைத் தேசத் துரோகிகள் என்று கூறுகின்றனர்.


எங்கள் நாட்டு மக்களுக்கு உழைப்பதற்கு எங்களுக்கில்லாத கவலை இந்தியாவிற்கு வெளியிலிருந்து ஆடுமாடு மேய்த்துப் பிழைக்க வந்தவர்கள் என்று சரித்திரம் கொண்ட இப் பார்ப் பனர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்கின்றேன். எங் களைத் தேசத் துரோகிகள் என்று கூறும் இவர்களுக்கும் இந்தத் தேசத்துக்கும் என்ன சம்பந்தம்?


- தந்தை பெரியார், குடிஅரசு, 30.10.1938


- ‘மணியோசை’


No comments:

Post a Comment