தமிழர்களே! நீங்கள் எத்தனை மேதாவிகளானாலும், அறி வாளிகளானாலும், செல்வவான்களானாலும் மற்றும் யாராய் இருந் தாலும் நீங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நாளில் முடிவெய்தப் போவது திண்ணம். ஆனால், இந்த அறிவையும், மேதாவித் தன்மையையும், செல்வத்தையும், மற்றதையும் இப்பொழுது எதற்குச் செலவழிக்கிறீர்கள்? பொய்ப்புகழ் தேடுவதிலும் பின்னால் என்ன ஆகப் போகிறதோ என்றுகூட அறிய முடியாத காரியத் திற்காகப் பொருளைத் தேடிப் பெருக்கி வைப்பதிலும் பயன்படுத்து கிறீர்கள். இம்முயற்சியில் நீங்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைகி றீர்கள்? எவ்வளவு சங்கடம், கவலை, மனவேதனை, சரீரப் பிர யாசை அடைகிறீர்கள்? இவை மாத்திரமா? இந்தக் காரியங்களுக்கு நீங்களே உங்கள் வாழ்வில் மனமார எவ்வளவு பொய் வஞ்சகம் பித்தலாட்டம், பழிவாங்கும் உணர்ச்சி ஆகிய காரியங்களில் ஈடுபட வேண்டி யவர்களாக ஆகின்றீர்கள் என்பவற்றையும் நினைத்துப் பாருங்கள். ஆகவே மானம், வீரம், அறிவு பெற்ற மனிதன் தன் வகுப்பை மற்றொரு வஞ்சக அறிவு பெற்ற வகுப்பு சூறை யாட அனுமதித்துக் கொண்டிருந்துவிட்டு மறைவது அறி வுடைமையா?
- தந்தை பெரியார், குடிஅரசு, 3.7.1938
- ‘மணியோசை’
No comments:
Post a Comment