பீகாரின் சமூகநீதிப் போராளியாக இறுதிவரை வாழ்ந்த நண்பர் ராம் அவதேஷ்சிங் அவர்கள் சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய வீரர். மண்டல் கமிஷன் செயலாக்கத்திற்குத் தொடர்ந்து குரல் கொடுத்தவர், இந்திரா சகானி வழக்கில் (மண்டல் வழக்கு) அவர் ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டு, தானே வாதாடிய வழக்குரைஞர். நாடாளுமன்ற மக்களவை - மாநிலங்களவைகளில் உறுப்பினராக பல ஆண்டுகாலம் தொண்டாற்றியவர். ராம் மனோகர் லோகி யாவின் சீடர். தந்தை பெரியார் அவர்கள்மீதும், திராவிடர் இயக்கத்தின்மீதும் மிகவும் பற்றுக் கொண்டவர்; சென்னைக்கு வரும் போதெல்லாம் பெரியார் திடலுக்கு வந்து நம்மைச் சந்திக்கத் தவறாதவர். வடக்கே தந்தை பெரியார்பற்றிய புரிதலை ஏற்படுத்திய சமூகநீதிப் போராளி.
ஜஸ்டீஸ் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனில் உறுப்பின ராகவும் பணியாற்றியவர்.
அவர் நேற்று (20.7.2020) பாட்னாவில் காலமானார் என்ற செய்தி, ஆழ்ந்த துயரத்திற்குரியது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், பீகார் சமூகநீதி அமைப்பிற்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது இயக்கத்தின் சார்பில் வீர வணக்கம்!
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
21.7.2020
No comments:
Post a Comment