ஒற்றைப் பத்தி : பெரிய‘‘வாள்''தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

ஒற்றைப் பத்தி : பெரிய‘‘வாள்''தான்!

ஜெகத்குரு என்கிறார்கள்; மகாபெரியவாள் என்கிறார்கள், இந்து மதத்தின் தலைவர் என்று சொல்லுகிறார்கள். எங்காவது இந்து மதத்தில் நாம் அனைவரும் சமம் - ஏற்றத்தாழ்வு இல்லை. நாம் ஒற்றுமையாக இருந்து சகோதரராக இருந்து செயல் படுவோம் என்று ஒரே ஒரு வார்த்தையை சங்கரமடத்துக் காரர்கள் - சங்கராச்சாரியார்கள் இதுவரை கூறியதுண்டா? எழு தியதுண்டா? இனியேனும் செய்வார்களா?


இதனை சவால் விட்டே கேட்கிறோம்.


 தீண்டாமை வேண்டும் - அது க்ஷேமகரமானது என்கிறார், எல்லாரும் ஒன்றாகிவிட வேண் டும் என்பதும் நாஸ்திகம் என் கிறார், மற்ற தேசங்கள் மாதிரி எல்லோரும் சமத்துவமாக வேண்டும் என்று கிளர்ச்சி செய் வது பண்புக்குறைவான போக்கு என்கிறார்.


- இப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஜெகத்குரு? எப்படி மகா பெரியவாள்?  எப்படி ஒட்டு மொத்தமாக இந்து மதத்துக்குத் தலைவர் ஆவார்?


இதுவரை இவர்கள் பேசியது, எழுதியது எல்லாம் என்ன? பிராமணர்களுக்காக வக்காலத்து வாங்குகிறேன் என்கிறார் - இதில் கம்யூனலாகவே சொல்லுகிறேன் என்கிறார். கன்னி கழியாத பிரா மணப் பெண்களுக்காக கன்னி காதான டிரஸ்டு ஏற்பாடு  என் கிறவரை சரியாகச் சொல்ல வேண்டுமானால் ‘பிராமண சங்கத் தலைவர்' என்று சொல் லுவதுதானே சரி!


பார்ப்பனர்களுக்கு வக் காலத்து வாங்குவதில் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந் திர சரஸ்வதியார்களின் தந்திர மும் அலாதியானது.


‘‘மற்ற ஜாதிகள் ‘‘பிராமணர்'' களைப் போல இத்தனை  கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷ ணைக் கொடுமையோ, பெண் கள் இத்தனை பெருவாரியாகக் காலேஜ் படிப்பு, உத்யோகம் என்று போய் ஸ்வயேச்சையாகத் திரியும்படி ‘‘தண்ணி தெளித்து'' விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால், ஏழை ‘‘பிராம்மண'' பெண்களை உத் தேசித்தே இந்த கன்னிகாதான டிரஸ்ட்.''


(‘தெய்வத்தின் குரல்',


2 ஆம் பாகம், பக்கம் 903)


பெருவாரியாகக் காலேஜ் படிப்பு, உத்யோகம் என்று பார்ப் பனப் பெண்கள் இருப்பது - அவர்களுக்கு வளரச்சிதானே - மேம்பட்ட நிலைதானே! அதனைக் குறையாக சித்தரிக்க முயல்வதைக் கவனியுங்கள். அது குறையென்றால், பிராமணப் பெண்கள் படிக்கக் கூடாது, உத் யோகம் பார்க்கக் கூடாது என்று சொல்லவேண்டியதுதானே!


எத்தகைய தளுக்கு, குலுக்கு ‘மோகினி அவதார' ஏமாற்றுப் பேச்சு! இதுதான் பார்ப்பனிய தந்திரம் என்பது.


‘‘நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில், பிரா மணன் சரீரத்தில் உழைத்த உழைப்பு, ஒரு குடியானவனின் உழைப்புக்கும் குறைச்சலான தல்ல. இவனுக்கு எத்தனை விரதானுஸ்டங்கள், உபவாசம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயப் போட்டாகவேண்டும். எத் தனை ஸ்நானம்? இந்த சிரமங்கள் இதர ஜாதியாருக்கு இல்லை. ஒரு குடியானவன் விழித்தெழுந்ததும், வயிறு ரொம்ப ஜில்லென்று பழையது சாப்பிடுகிறது மாதிரிச் செய்ய பிராம்மணனுக்கு ‘ரைட்' ஏது?''


(‘தெய்வத்தின் குரல்',


2 ஆம் பாகம், பக்கம்  1013-1014)


எவ்வளவு தமாஷ்! எவ்வ ளவு சாமர்த்தியம்! ஆமாம், இவாளை பழையது சாப்பிட்டு ஜில்லென்று இருக்கவேண்டாம் என்று யார் கையைப் பிடித்து இழுத்தது?


- மயிலாடன்


No comments:

Post a Comment