புதுவை முதல்வருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி
சென்னை, ஜூலை 21, புதுச்சேரி சட்டசபையில் நேற்று முதல்வர் நாராயண சாமி பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக கலைஞர் பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி பள்ளி மாணவர் களுக்கு கலைஞர் பெயரில் சிற்றுண்டி வழங்கும் திட்ட அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கலைஞர் அவர்கள் கழகம் வளர்த்த மாநிலத்தில் அவர் பெயரால் ஒரு திட்டம் தொடங்கியிருப்பது தனக்கு பெருமகிழ்ச்சியை தருவதாகவும் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரி வித்துள்ளார். மேலும் கலைஞர் பெயரில் சிற்றுண்டி திட்டத்தின் மூலம் கோடானகோடி திமுக தொண் டர்கள் மனதில் முதல்வர் நாராயணசாமி இடம் பெற்று விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment