சென்னை,ஜூலை 1- தமிழகத்தில் 39 அய்.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் தமிழக செயலகம் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவருக்கு பதிலாக மகேஷ் அகர்வால் சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்ட காவல் ஆணையர் டேவிட்சன் தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரேமானந்த் சின்கா மதுரை மாவட்ட காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய அய்.பி.எஸ். அதிகாரிகளும் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு: அய்.அய்.டி. ஆராய்ச்சியில் தகவல்
சென்னை, ஜூலை1-காலநிலை மாற்றம் திட்டத்தின் (எஸ்.பி.எல்.அய்.சி.இ.) கீழ் கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம் ஏற்படுத் தும் தாக்கம் மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான அவசியம் குறித்து சென்னை அய்.அய்.டி.யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியை மேற் கொண்டனர்.
இந்த ஆராய்ச்சி சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல் கத்தா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர நகரங் களில் நடத்தப்பட்டன. சென்னையைப் பொறுத்தவரை கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம், அப்போது இருந்த பருவநிலை மாற்றம் ஆகியவற்றை குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர்.
ஆராய்ச்சியின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவில் தற்போது வெளியேறுவதாகவும், இதன் தாக்கம் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை, ஈரப் பதத்தை தொடர்ந்து அதிகரிக்க வைப்பதாகவும், இந்த பருவநிலை மாற்றங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் முடிவுகள் தெரிய வந்துள்ளன.
அந்த வகையில், பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளி யேற்றும் முக்கிய நகரங்களில் சென்னையும் ஒன்றாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதே நிலை தொடரும் பட்சத்தில், சென்னையில் வரும் ஆண்டுகளில் அதிகமாக மழைப் பொழிவு உண்டாகி, மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர்கள் கணிக்கின்றனர். இதைக் கட்டுப் படுத்தாவிட்டால், சென்னையில் ஓரிருநாட்கள் பெய்யும் கன மழையால் ஏற்படும் பெருவெள்ளதால் நகரம் பாதிப்படையும் என்றும் அந்த ஆராய்ச்சியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment