எந்தப் பார்ப்பானாவது சத்திரம் கட்டி எல்லா மக்களுக்கும் சாப்பாடு போடுகிறார்களா? எங்காவது தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்டி இருக்கின்றார்களா?
- - - - -
சடங்கு, பண்டிகை, உற்சவம். இம்மூன்றும் மக்களைப் பொருளா தாரத் துறையில் அடிமையாக்கி வைப்பதற்காகவே இருந்து வருகின்றன என்பதல்லாமல் வேறு என்ன?
- - - - -
மேலுலகம், மோட்சம், நரகம் இம்மூன்றுமே மனிதனை மூடனா கவும், பயங்காளியாகவும், அடிமையாகவுமே ஏற்படுத்தப்பட்டவை அல்லவா?
- - - - -
என்ன கஷ்டப்பட்டாவது மறுஉலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க் கையைப் பொருத்துங்கள், மகிழ்ச்சி கிடைக்கிறதா, இல்லையா? புரியும்!
- குடிஅரசு - துணுக்குகள் - 20.09.1947
- ‘மணியோசை’
No comments:
Post a Comment