பெரியார் கேட்கும் கேள்விகள்! (37) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 7, 2020

பெரியார் கேட்கும் கேள்விகள்! (37)


சுதந்திரமான காதலுக்கு இடமிருந்தால்தான் ஒரு நாடோ ஒரு சமூகமோ அறிவு, அன்பு, நாகரிகம், தாட்சண்யம் முதலியவைகளில் பெருக்கமடையும், நிர்ப்பந்தக் காதல் இருக்குமிடத்தில் மிருகத் தன்மையும் அடிமைத் தன்மையும்தான் பெருகும். ஒப்புக் கொள்கிறீர்களா?


- - - - -


பெண்களுக்கு மாத்திரம் கற்பு நிர்ப்பந்தமாய் வைத்ததாலேயே ஆண்கள் விபசாரர்களாக வேண்டியதாய் விட்டது. - மறுக்க முடியுமா?


- - - - -


விதவைத் தன்மை இல்லாமலிருந்தால் அரை பாகம் விபசாரத் தன்மை குறைந்திருக்குமே - மறுக்க முடியுமா?


- - - - -


இவர்கள் என்ன சொல்லுவார்கள், அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைக்கிற தன்மை ஒருவித அடிமைத் தன்மையேயல்லாமல் வேறு என்ன?


- குடிஅரசு - துணுக்குகள் - 20.09.1947


- ‘மணியோசை’


No comments:

Post a Comment