ராசரத்தினம் அய்யா அவர்களை நான் 1987-ஆம் ஆண்டு முதல் அறிவேன். பெரியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் நம் பெரியார் திடலில் இயங்கும் பல நிறுவனங்களுக்கு ஆடிட்டராக நிய மித்தப்பட்ட பிறகு அய்யாவோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிட்டியது. 1993 ஆண்டு முதல் அடிக்கடி ரயிலில் பயணித்துள்ளோம்.
ஆசிரியர் அய்யா, மறைந்த ஆடிட்டர் சுரேந்தர், ராசரத்தினம் அய்யா, நானும் சேர்ந்து ஒரே கூப்பேயில் பல நேரம் உரையாடிக் கொண்டே செல்வோம். அந்த சமயங்களில் பல்வேறு விஷ யங்களை அறிந்து கொண்டு உள்ளேன். அத் தருணம் பெருமைக்குரிய தருணமாக கருதுகிறேன். வேறு சில நிறுவனங்களுக்காக அவரிடம் ஆலோசனை பெறுவதுண்டு. அப்பொழுதெல்லாம், பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
"நிறுவனங்களின் நிதி ஆய்வு குறித்த பணியின் போது அனைத்து வித நிதிப்பரிமாற்றம் கேட்டு அழுத்தம் கொடுக்கவேண்டாம் என்று அவர் அறிவுரை கூறுவார். மேலும் விசாரணையின் போது குறிப்பிட்ட காரணங்களால் நான் அழுத்தம் தரவில்லை என்று கூறுங்கள். முக்கியமான காரணங்களுக்காக மட்டுமே அதிகம் கவனம் செலுத்துவேன். இது போன்ற நடவடிக்கை பணியை விரைந்து முடிக்க பெரிதும் உதவும் மேலும் நிறுவனங்களுக்கும் வேலைப்பளு குறையும், இது ஆடிட்டர்களுக்கு தேவையான முக்கியமான ஆலோசனை ஆகும். இதை நான் பின்பற்றி வருகிறேன். இதனால் தான் பல்வேறு நிதிச் சிக்கல் தொடர்பான விவகாரங்களை விரைந்து முடிக்க முடிந்தது".
நம் நிறுவனங்களுக்காக ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுரைக்கு ஏற்ப, ராசரத்தினம் அய்யா அவர்களை சந்தித்து உள்ளேன்.
நம் ஆசிரியர் அய்யா அவர்களைப் பற்றி பேசும் பொழுதெல்லாம், தான் ஆசிரியர் அவர் களுக்கு மிகவும் நெருக்கமாகப் பழகுவதற்கு காரணம், "ஆசிரியர் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பணிகளைச் செய்து வருகிறார். அவரது சமூகப் போராட்டம் மற்றும் இதர சேவைகளை என்னால் செய்ய முடியாது, ஆனால் ஆசிரியருக்கு என்னால் ஆன சிறு பங்கைச் செய்வதன் மூலம் அவரது நடவடிக்கைகளில் நானும் ஒருவனாக உள்ளேன்” என்று கூறுவார்.
வருமான வரி மேல்முறையீட்டு அதிகாரியிடம், அனைத்து காரணங்களுக்காகவும் (grounds of appeal) வாதாடவேண்டாம். சில காரணங்களை விட்டுக் கொடுத்துவிடு. மேல்முறையீட்டு அதிகாரிக்கு உன் மீது நம்பிக்கை வரும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். அதற்கேற்ப வாதாடி பல நேரங்களில் வெற்றிபெற்றுள்ளேன்
அது போன்று பல்வேறு தொண்டு நிறுவனங் களோடு ஈடுபடுத்தி தம்மை கொண்டவர். இறுதிவரை, அனைத்து கூட்டங்களுக்கும் வந்து பங்கேற்று தக்க ஆலோ சனைகள் வழங்குவார். ஆசிரியர் அவர்களுடைய உடல் நலத்தில் மிகவும் அக் கறை கொண்டவர். அன்புராஜ் அவர்கள் சில பொறுப்புகளை ஏற்றுக் கொண் டார் என்றவுடன், மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
இந்திய இளைஞர் சங்கத்தில் என்னை உறுப்பினராக ஆக் கினார். அச் சங்கத்தின், செய லாளராக பணிபரியும் போது, பல்வேறு சங்கடங்கள் ஏற்படும் போது, தகுந்த ஆலோசனைகள் வழங்கி என்னை உற்சாகபடுத்து வார். தனிப்பட்ட முறையில், அய்யா அவர்களும், அம்மா அவர்களும் மிகவும் பாசத்துடன் பழகுவார்கள்.
என்னுடய அலுவலகம், இல்லம், நிகழ்ச்சிகள் அனைத் திலும் பங்கு கொண்டு என்னை பெருமை படுத்தி உள்ளார். 5 அல்லது 6 மாதங்கள் முன்பு, என்னுடைய பேத்திக்கு பெயர் சூட்டும் விழாவுக்கு வந்து, ஆடிட்டர் திரு. மனோகரன் அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தார். பேத்தியின் பெயர் "ஆத்யா இன்னிசை" நல்ல பெயர் என்று சொல்லி வாழ்த்தி விட்டு சென்றார்.
- ஆடிட்டர்
ஆர். ராமச்சந்திரன்
No comments:
Post a Comment