மாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்: 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

மாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்: 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல்


சீர்காழி, ஜூலை 10- நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 58). கூலித்தொழிலாளி. இவ ரது மனைவி உஷா(வயது 52). இவர்களது மகள் விமலா (வயது 17). தாயும் மகளும் வாய் பேச முடியாத, காதும் கேட்காத மாற்றுத்திறனாளிகள்.


ஊரக வேலை உறுதிய ளிப்பு திட்டத்தில் வேலைக்கு சென்று வந்த கூலி தொகையை கடந்த 10 ஆண்டுகளாக மக ளின் திருமணத்திற்காக உஷா சேர்த்து வைத்துள்ளார். ஆயி ரம் ரூபாய், 500 ரூபாய் நோட் டுகளாக ரூ.35,500 வரை சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டி, அதோடு அரை பவுன் தங்கத் தோடையும் வைத்து கணவருக்கு தெரி யாமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார்.


இந்தநிலையில், ராஜதுரை தனது குடிசையை பசுமை வீடுகள் திட்டத்தில் அனுமதி பெற்று வீடாகக் கட்டும் பணி யைத் தொடங்கி உள்ளார். இதற்காக தொழிலாளர்கள், வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டியபோது பிளாஸ் டிக் பையில், பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டு களை இருந்ததை உஷாவிடம் காண்பித்தனர். அவர் ‘அந்தப் பணம் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்தது’ என்று சைகை மூலம் தெரிவித்தார். அவர்கள், 2016லேயே மத்திய அரசு அந்த நோட்டைச் செல் லாது என அறிவித்து விட் டதை தெரிவித்ததும், அதிர்ச் சியில் தாயும், மகளும் கதறி அழுதனர்.


No comments:

Post a Comment